???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   05 , 2019  21:54:03 IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நேற்று கோழிக்கோடு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தங்கள் சொந்த கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் சொந்த விஷயங்களை குறித்துதான் கற்பனை செய்கிறார்கள். இதனால்தான் நாடு பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.

உண்மையில் நாட்டு மக்களை பிரதமர் மோடி கவனித்து இருந்தால், எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. நிஜத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதே மோடியின் நிர்வாகம் ஆகும். ஏனெனில் அவர் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார். இந்தியாவும் அதைப்போன்ற ஒரு கற்பனை உலகில் வசிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தற்போது அது உடைந்திருப்பதால் அவர் சிக்கலில் உள்ளார்.இந்தியா அனைவருக்குமானது. அதாவது அனைத்து இனம், அனைத்து மதம், அனைத்து கலாசாரம் என அனைத்துக்குமானதுதான் இந்தியா. இதுதான் எங்கள் நம்பிக்கை ஆகும்.

இந்த நாட்டை சேர்ந்த யாருக்கு எதிராகவும் எந்தவகையான பாகுபாட்டையும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இந்த பாகுபாட்டை வெளிப்படுத்துவோருக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே முஸ்லிம் அல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்"என ராகுல் காந்தி கூறினார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...