???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி.

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:56:17 IST

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக ஃபிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் ஃபிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் ஃபுலோரன்ஸ் பார்லியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் இடங்களையும் பார்வையிட இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த 3 நாள் பயணம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஃபிரான்ஸ் பயணம் ரஃபேல் (ஊழலை) மூடி மறைப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. ரஃபேல் ஒப்பந்தம் மட்டுமல்லாமல் மற்ற ஒப்பத்தங்களும் இந்த பயணத்தின்போது முடிவாக உள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை போலவே மற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும்” என அவர் தெரிவித்தார்.
 
ரஃபேல் ஒப்பந்தத்தைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசை ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...