???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களின் உணர்வை பிரதமர் புரிந்துகொள்ளவில்லை: ராகுல் காந்தி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   31 , 2017  00:57:32 IST

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பேரழிவு என்றும், மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
 
கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ஆம் தேதி அறிவித்தது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, அடுத்த மாதம் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 
 
இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைமையில் இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடந்தது. 
 
ஆலோசனை முடிவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதி தேசிய அளவில் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
 
கூட்டத்தில் 8-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றும்,  உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது மிகப்பெரிய ஒரு பேரழிவு என்றும் தெரிவித்தார். 
 
பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை ரூபாய் நோட்டு ஒழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கையால் அழித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...