???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   13 , 2018  06:50:33 IST

தொழிலதிபர்கள் யாராவது பணங்களை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஏழைகளை காயப்படுத்தி, சூட் பூட் அணிந்த பணக்காரர்களுக்கு பயன் அளித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ரஃபேல் போர் விமான ஒப்பந்ததத்தில் மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நல்ல பலன்களை ஏற்படுத்திதந்துள்ளார். மோடி தலைமையிலான அரசு ரூ.30,000 கோடியை ஏழைகளிடமிருந்து பறித்து தொழிலதிபர்களின் பையில் வைத்துவிட்டது.
 
பணமதிப்பிழப்பு மூலம் தலையனைக்கு அடியில் இருக்கும் பணத்தை வெளியில் கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியது சரியே. யாரிடமிருந்து பணத்தை பறிக்கப்போகிறோம் என்பதை அவர் கூறவில்லை. பணமதிப்பிழப்பு நேரத்தில் பணங்களை மாற்ற வரிசையில் நின்றது ஏழை மக்களே.. சூட் பூட் அணிந்த யாராவது பணத்தினை மாற்ற வரிசையில் இருந்தார்களா? தொழிலதிபர்கள் வரிசையில் நின்றார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியுள்ளார். ஏழைகளின் பணத்தை பறித்த அவர், பணக்காரர்களுக்கு நன்மை அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.
 
முன்னதாக, ஜாமினில் உள்ள ராகுலும், சோனியாவும் எவரது நேர்மை குறித்தும் கேள்வி எழுப்ப தேவையில்லை என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் அவர்கள் ஜாமின் பெற்றுள்ளார்கள் என்பதை மறந்து என்னை நோக்கி எழுப்பி வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...