???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சில்லுக்கருப்பட்டி- திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   27 , 2019  06:44:35 IST


Andhimazhai Image

திரைப்படம் ஒரு அற்புதமான அனுபவம் என்பதை மீண்டும் தனது  படைப்பின் மூலம்  நிரூபித்திருக்கிறார் ஹலீதா ஷமீம்.  இத்திரைப்படம் தரும் அனுபவம் மூலம் நம்மால் எதிர்பாலினத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலும் என்றே தோன்றுகிறது.

 

குப்பைகளை சேகரிக்கும் பதின்பருவ பையனுக்கு ஏற்படும் முதல் ஈர்ப்பு, விதைப் புற்றுநோயால் பாதிக்கப்படும் இளைஞனின் பயணம், முதிய வயதில் காதல் மலரும் பயணம்,  திருமணமாகி 12 வருடங்களை  தொடவிருக்கும் நடுத்தர வயது தம்பதிகளின் பயணம் என்று 4 வெவ்வேறு கதைகளை பக்குவமாக  படமாக்கி இருக்கிறார் ஹலீதா ஷமீம். இவரின் முதல் படமான  பூவரசம் பீப்பீயே இவரின் தெளிவான கதை சொல்லும் பானிக்கு சான்று. அதுபோலவே திரைக்கதை தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.  

 

ஆண்களின் உலகை இவரைப்போன்று அழகாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்க முடியாது என்றே தோன்றுகிறது.  ஆண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

 

படத்தின் முக்கிய  பலமே வசனங்கள்தான்.  “ கட்டி வந்தவனுக்கு யாராவது பொண்ணை கட்டிக்கொடுப்பாங்களா”, “ இந்த சமூகம் உங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்காம விட்டது”  ” உன்னை பார்த்துக்குறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு”  என்ற எல்லா வசனங்களும் முத்துக்கள் போன்ற பொக்கிஷம். இப்படி எதார்த்தமான,  எளிமையான வசனங்கள் தமிழ் சினிமாவில்  வருவது குறைவே.

 

திருமணமாகி  12 வருடங்கள் கடந்து தங்களை சலிப்பூட்டும் தம்பதியாக நினைத்துகொள்ளும் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி- சுனைனா வாழ்ந்திருக்கிறார்கள்.  ஆண்கள் எதையும் கவனிக்கவே இல்லை என்ற குறையை மட்டும் படத்தில் பதிவு செய்யாமல், அவர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பதையும்  விளக்கியிருப்பது சிறப்பு.  

 

அதுபோலவே  லீனா சாம்சன்- ஸ்ரீராமும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.   முதியவர்களின் தனிமையை அழுகாச்சி காவியமாக விவரிக்காமல்  சுவாரஸ்யமாக விவரித்திருப்பதும் அருமை.

 

விதைப் புற்றுநோய் இருக்கிறது என்பதை  அறிந்துகொள்ளும் இளைஞனின்  மனநிலையை கச்சிதமாக  நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன்.  அழுது உடையும் காட்சியாக இருந்தாலும் சரி, சிகிச்சையை அணுகும்போது நோயாளிக்குள் நடக்கும் மனப்போராட்டத்தையும்  மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

ஒட்டுமொத்தமாக ’சில்லுக்கருப்பட்டி’ திகட்டாமல் தித்திக்கும் இனிப்பு..click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...