???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: இடைத்தேர்தல் முடிவு குறித்து ராகுல்

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  07:24:24 IST

உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
 
உத்தரப்பிரதேசத்தின் புல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. புல்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றார். சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கே.எஸ்.பட்டேல் தோல்வியடைந்துள்ளார். இந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் வென்ற கோரக்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.
 
 இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். உ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...