???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“நிச்சயமாக தீர்வு எட்டப்படும்”: நீட் தேர்வு பற்றிய கேள்விக்கு ராகுல் பதில்

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  23:16:55 IST

தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். முதலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
 
அப்போது, மாணவிகளின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம் என்று பல்வேறு விவகாரங்களில் மாணவிகளின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
 
இதனை அடுத்து, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “எங்களுக்கு பிரச்னை புரிகிறது. அது (நீட் தேர்வு) இந்த மாநில இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. நாங்கள் திறந்த மனம் உள்ளவர்கள். இது கண்டிப்பாக சரி செய்ய முடியும். இதற்கு தீர்வு எட்டப்படும்” என்று பதிலளித்தார்.
 
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு, “மத்தியில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மதவாத சக்திகளை தோற்கடித்து வெளியேற்றுவதற்காகவே நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம் அதுவே எங்களது கடமை, யார் பிரதமர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று பதிலளித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...