???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டம் இல்லாத அரசு: மோடியின் 100 ஆட்சி குறித்து ராகுல் காட்டம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   08 , 2019  23:40:38 IST

சூறையாடப்பட்டிருக்கும் நம்முடைய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகாட்டுதல்களும் திட்டங்களும் இல்லாத அரசாக மோடியின் நூறு நாள் ஆட்சி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மோடி தலைமையில் பா.ஜ.க அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது. மோடி தலைமையிலான நூறு நாள்கள் ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நூறு நாள்களில் எந்த வளர்ச்சியும் இல்லாத, ஜனநாயகத்தைத் தொடர்ச்சியாக அழிக்கும், ஊடகங்களின் விமர்சனங்களை மூழ்கச் செய்யும் வகையில் குரல் வளையை நெறிப்பது, உறுதியான தலைமை இல்லாமல், சூறையாடப்பட்ட நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகாட்டுதலும், திட்டங்களும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...