???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:53:11 IST

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்தி விமான நிலையத்தில் இருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு மாணவிகளுடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். பின்னர் லீ மெரீடியன் விடுதிக்கு செல்லும் ராகுல்காந்தி, அங்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
 
அதன் பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் பிற்பகலில் திருவனந்தபுரம் செல்லும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் செல்கிறார். ராகுல் காந்தி உடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் திருவனந்தபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் முகைதீன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
 
இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...