???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   02 , 2020  22:37:20 IST

நாடுகளின் உற்பத்தி திறன், பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் அவற்றின் கடன் வாங்கும் திறன்பற்றி மதிப்பீடு செய்யும் ‘மூடிஸ்’ நிறுவனம் முதலீடு விஷயத்தில் இந்தியாவுக்கான தரவரிசையை 22 ஆண்டுகளில் முதன்முதலாக குறைத்து இருக்கிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது 3-வது தரவரிசைக்கு குறைத்துள்ள அந்த நிறுவனம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மதிப்பிட்டு உள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரதமர் மோடி பொருளாதாரத்தை எவ்வளவு மோசமாக கையாளுகிறார் என்பது ‘மூடிஸ்’ நிறுவனம் வழங்கியுள்ள தரவரிசையின் மூலம் தெரியவருவதாகவும், இந்த நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.

ஏழைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு போதிய ஆதரவு இல்லாததால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...