???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தியின் உருக்கமான கடிதம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   03 , 2019  07:48:19 IST


Andhimazhai Image

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும், உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவை கூட்டி அடுத்த தலைவரை தேர்வு செய்யுமாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து அவர் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 

’’காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றியது குறித்து பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்திருந்த கட்சியின் மீதும் இந்த நாட்டின் மீதும் அளவு கடந்த நன்றியுணர்வும் அன்பும் வைத்திருக்கிறேன்.

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று,  தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

 

கட்சியின் வளர்சியை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சியை மீண்டும் கட்டமைப்பதற்கு பல கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும். என்னையும் சேர்த்து வேறு பல உறுப்பினர்களும் இந்த தோல்விக்கு  காரணமாக  இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் பொறுப்புணர்வை நான் கணிப்பது சரியான செயலாக இருக்காது.

 

என்னுடன் பணியாற்றிய கட்சியின் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் அது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுதான் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.பதவியை கைப்பற்றுவதற்காக நான் போராடவில்லை. எனக்கு பாஜகவின் மீது எந்த வெறுப்பும் கோபமும் இல்லை. ஆனால் அவர்களின் கொள்கைகள் மீதுதான் எனக்கு எதிர் கருத்து இருக்கிறது.

 

எந்த வகையிலும் எனது போராட்டத்திலிருந்து நான் பின்வாங்கவில்லை. நான் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் நேர்மையான விசுவாசிதான். இந்தியாவின் மகனாக எனது தாய் நாட்டிற்கு இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன்’’

 

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...