???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை 0 இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2020  23:38:06 IST

பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
 
பீகார் சட்டப் பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 
 
இந்நிலையில், சசாரம் நகரில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமாரும் கலந்துகொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரு காலத்தில் இங்கு ஆட்சி செய்தவர்கள் தற்போது வளர்ந்து வரும் பீகாரை பேராசை கண்களால் பார்ப்பதாக கூறினார். தங்களை பின் தங்கிய நிலைமைக்குத் தள்ளியது யார் என்பதை, பீகார் மக்கள் மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அத்துடன், பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
 
இதனிடையே, நவாடா மாவட்டத்தின் ஹிசுவா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இக்கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவரும், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஷ்வி யாதவும் பங்கேற்றார்.
 
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பீகார் மக்களிடம் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக சாடினார். மேலும், கடந்த தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்களே, அதை நடைமுறைப்படுத்தினீர்களா எனவும் பிரதருக்கு கேள்வி எழுப்பினார்.முன்னதாக பேசிய தேஜஷ்வி, மத்தியில் ஆளும் பாஜக சாதி, மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆர்ஜேடி கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் அரசு வேலை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவே, முதல் கையெழுத்து போடப்படும் என்று உறுதியளித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...