???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன்? பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா?: ராமதாஸ் குற்றச்சாட்டு 0 எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் 0 நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது! 0 எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 0 தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் 0 ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் 0 தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா 0 பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள்! 0 பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்! 0 நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் 0 பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் 0 பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு 0 லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர்! 0 மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் 0 வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எங்களை வெறுப்பவர்களிடமும் அன்பு செலுத்துவோம்: ராகுல்காந்தி!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   16 , 2017  02:25:50 IST


Andhimazhai Image

இன்று காலை  டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார். சோனியா காந்தியிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் காந்தி பெற்றுக்கொண்டார்.  இதையடுத்து ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

 

தலைவராக அவர் பொறுப்பேற்ற பின் அவர் பேசியதாவது: 

 

‘’நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே 13 ஆண்டுகளுக்கு முன்  அரசியலுக்கு வந்தேன். நாங்கள் நீண்ட பாரம்பரியம் உடைய கட்சி.  ஆனால் தற்போது இளமையானது; மாற்றங்களை நிகழ்த்த இளைஞர்களுக்கு  நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். காங்கிரஸ் கட்சி மக்களின் குரலாக ஒலிக்கும். அன்பு பாசத்தால்தான் எதையும் நாம் சாதிக்க முடியும். எங்களை வெறுப்பவர்களிடமும் அன்பு செலுத்துவோம்.

 

பாரதிய ஜனதா கட்சியுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் எங்கள் சகோதர்களாகவே நினைக்கிறோம்.  நாட்டுக்கான அனைத்து முடிவையும் ஒருவரே எடுக்கிறார். மாற்று கருத்தை சொல்ல முடிவதில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தால் தான் வெற்றி பெறுகிறார்கள். நன்மை செய்து வெற்றியடையவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்படுகிறது; இதை கண்டு காங்கிரஸ் அச்சப்படாது. ஒரு முறை நீங்கள் (பா.ஜ.க) நாட்டை தீயிட்டால் அணைப்பது கடினம். நாட்டை பிரிவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ.க இருந்தால் நாங்கள் மக்களை ஒன்று படுத்துவோம். பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

 

காங்கிரஸ் கட்சியே எனது குடும்பம். வரும் காலத்தில் இந்தியாவை நாங்கள் வளப்படுத்துவோம். காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக, தனக்காக  போராட முடியாத மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.’’ இவ்வாறு அவர் பேசினார்.  

 

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கிடையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகியிருக்கிறார். பாஜக அசுர வளர்ச்சி பெற்று அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தபின்பு நடை பெற்றவையெல்லாம் மக்களுக்கு உகந்தவையாக இல்லை. பாஜக மீதான நடுத்தர வர்க்க மக்களின் வெறுப்பு வெளிப்பட ஆரம்பித்துவிட்டாலும் அடுத்த தேர்தலிலும் மோடியையே மீண்டும் பிரதமராக்கும் முஸ்தீபுகள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன. குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் குஜராத் தேர்தலில் மோடியை ராகுல் காந்தி திணற அடித்தார் என்றுதான் சொல்லவேண்டும். தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடியின் கண்ணீர் டிராமாக்கள் எல்லாம் இதையே காட்டுகின்றன. பாஜக கொஞ்சம் ஆட்டம் கொண்டிருக்கிறது என்றாலும் ராகுலின் முடிவுகள் ஒரு தேசத்தையே பாதிக்கும் என்பதால் அவர் ஒரு வலுவான காங்கிரஸ் தலைவராக உருவெடுப்பார் என நம்பலாம். ஏனெனில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த ராகுல் காந்தி இல்லை இப்போது.   ராகுல் நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை அறிந்து, கட்சித் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் இணைந்து வேலைசெய்து தன்னை ஒரு தலைவராக மற்றவர்கள் ஏற்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார். பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் வாக்குச் சதவீதம் அதிகரித்ததற்கும், குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காங்கிரஸ் பக்கம் திரும்பத் தயாராக இருப்பதற்கும் ராகுலின் தீவிரப் பிரச்சாரங்களே காரணம் என்று . இளைஞர்களை ராகுல் கவர்ந்திருக்கிறார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது ராகுலின்  சாதனையாகத்தான் பார்க்கப்படும். ராகுல் காந்தி காங்கிரஸை மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...