???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   23 , 2020  21:16:49 IST

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதைத்தொடர்ந்து, தனது மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று கூறி, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு இருப்பதாகவும் புகாரில் அவர் கூறி இருந்தார்.
 
இதையடுத்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து சுஷாந்த் சிங் தற்கொலையை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரிக்க தொடங்கினர்.
 
இந்த விசாரணையில் நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்குக்காக அவர் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
 
முன்னதாக ரியா சக்ரவர்த்தியின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
 
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் கடந்த 2 நாட்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்திப்பட தயாரிப்பாளர் மது மந்தேனாவிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
 
இதுவரை கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டவர்கள், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகைகள் சிலரின் பெயரை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் அடிபட்டன. தேவைப்பட்டால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
 
இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீரென்று சம்மன் அனுப்பினர்.
 
ரகுல்பிரீத் சிங்குக்கு அனுப்பப்பட்ட சம்மனில் விசாரணைக்காக இன்று (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு கூறப்பட்டு உள்ளது. தீபிகா படுகோனேக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறும், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு சனிக்கிழமை ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...