???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக அரசை விமர்சித்த ராகுல் பஜாஜ்: பதிலளித்த அமித் ஷா!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   01 , 2019  23:11:53 IST

எகனாமிக் டைம்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பஜாஜ் குழும தலைவர் ராகுல் பஜாஜ், நாட்டில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமை இருந்ததாக கூறிய அவர், தற்போது பாஜக ஆட்சியில் உள்ளவர்களை விமர்சிக்க மக்கள் அச்சப்படுவதாகவும் கூறினார்.

காந்தியை கொன்ற பிரக்யா தாக்கூருக்கு, பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததாக விமர்சித்த ராகுல் பஜாஜ் நாட்டில் நடைபெறும் கும்பல் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு அரசை விமர்சித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அரசை விமர்சிக்க யாரும் அச்சப்பட தேவையில்லை என மேலும், பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் பல்வேறு நாளிதழ்கள் விமர்சித்து வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

தங்கள் மீதான விமர்சனங்களை வரவேற்பதாக கூறிய அமித்ஷா, அந்த விமர்சனங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து மேம்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...