![]() |
ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி!Posted : வியாழக்கிழமை, ஜனவரி 14 , 2021 10:09:31 IST
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தனி விமானத்தில் வந்து கண்டு களித்தார் ராகுல் காந்தி. அவருடன் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
கண்டு ரசித்த பின் பேசிய ராகுல் காந்தி எம்.பி., "தமிழக மக்களுக்கு வணக்கம்; ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் கலாசாரம், பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது; அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றைப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்துப் பாராட்டவே வந்துள்ளேன்" என்று கூறினார்.
|
|