???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் ஆஸ்கர் விருது பட்டியலில் ஏ. ஆர். ரஹ்மான்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   14 , 2016  07:38:16 IST

ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மீண்டும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
 
சிலம்டாக் மில்லியனர் படத்துக்காக 2009-ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். பிரபல கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பீலே: எ பர்த் ஆஃப் எ லிஜண்ட் என்ற படத்திற்கு இசை அமைத்ததற்காக மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
 
ஒரிஜினல் பாடல் பிரிவில் ஏ.ஆர். ரஹ்மான் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதில் மொத்தம் 145 போட்டியாளர்கள் உள்ளனர். அந்த படத்தில் வரும் ஜிங்கா பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசைப்பிரிவிலும் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடைபெறுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...