???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  23:28:53 IST

ரஃபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2012-ம் ஆண்டு பிரானஸ் நாட்டிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் மத்தியில் ஆட்சி மாறிய நிலையில், ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
 
தொடர்ந்து 2015-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 விமானங்கள் வாங்குவதற்காக 58,000 கோடி ரூபாய் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையை விட பலமடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
 
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது குறித்து நீதிமன்ற கண்காப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினித் தண்டா, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
 
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்தது.
 
மேலும், ரஃபேல் ஒப்பந்ததின் முழு விவரங்களை வெளியிட்டால், அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. இரண்டு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 14-ம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது.
 
இந்நிலையில், போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே, சந்தேகம் எழாத நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...