???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2019  22:39:38 IST

பிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியாமலேயே பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
 
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அப்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் குறிப்பு அனுப்பியுள்ளார்.
 
அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகருடன் பிரதமர் அலுவலக இணை செயலாளர் தொலைபேசி மூலம் பேசியதாக, பிரான்ஸ் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நமது பேச்சுவார்த்தையின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையிலான தலையீட்டை பிரதமர் அலுவலகம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
 
மேலும், பேச்சுவார்த்தையின் முடிவில் திருப்தி ஏற்படவில்லை என்றால், அதில் தேவையான மாற்றங்களை உரிய அளவில் பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...