???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு! 0 ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் 0 டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்! 0 ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 0 நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் 0 கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 0 உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை 0 இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 0 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ 0 ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் 0 தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 0 ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி 0 மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை 0 ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலிவுட்டில் ரேடியோபெட்டி இயக்குநர்!

Posted : வியாழக்கிழமை,   மே   14 , 2020  04:06:28 IST

  சர்வதேச விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் கால்பதிக்கிறார். இவரது எழுத்து இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’ என்ற படம் உருவாகி உள்ளது. ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போலந்து ஒளிப்பதிவாளர் ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் ஒளிப்பதிவில், ‘சார்லி’ புகழ் ஜெயஸ்ரீ லக்ஷ்மிநாராயண் கலை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளுக்குப் பொறுப்பேற்க, ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். ‘பன்சூரி’ அனைத்து பணிகளும் நிறைவடைந்து உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...