???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:49:53 IST

நடிகை நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன், நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் லெஜண்ட் என்றும், அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் என்றும் ராதாரவி தெரிவித்தார். 
 
நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம் என்று ராதாரவி கூறினார். நயன்தாராவை பற்றி வெளிவராத செய்திகளே கிடையாது என்றும், அதெல்லாம் தாண்டி அவர் திரையுலகில் நிற்பதாக ராதாரவி தெரிவித்தார். நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார் என்று ராதாரவி தெரிவித்தார்.
 
ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். இந்த நிலையில், ராதாரவி மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அந்த கட்சியியன் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...