???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 26- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   07 , 2020  06:08:57 IST

எல்லாம் கிடைத்து விட்டால் பிறகு வாழ என்ன இருக்கிறது?  கிடைக்காமல் போனால் கிட்டுகிற உணர்வு, போராடி ஓட யத்தனிக்கும் குணம், எங்கோ இருந்து கிடைக்கிற சக்தி கிட்டிய பின் கிடைக்கவில்லை என்பது தான் நான் உணர்ந்த அனுபவித்து கண்டு கொண்ட தெளிவு. அது எனக்கு மட்டும் தானா இல்லை இது எல்லோருக்கும் பொதுமைப் படுத்த இயலுமா என்று எனக்கு  தெரியவில்லை. சரி நேரடியாகவே பேசிக் கொள்வோம்.

 

எனக்கு நினைவு தெரிந்து நான் தாயின் முகம் காண கொடுத்து வைக்கவில்லை. நான்காவது படிக்கும் முன்பாகவே மூத்த சகோதரிகள் இருவர் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்கள். பிறகு பெண் என்பது என் வாழ்வில் தாய்மை உணர்வுடன் வந்த மனைவி மட்டும்தான்.

 

குடும்ப உறவுகள் என் தாயோடு பிறந்த நான்கு சகோதர்ர்கள் ஏனென்று கூட கேட்க அருகே இன்று வரை வந்ததில்லை. ஏழ்மையில் சிக்கிக் கொண்டவனை உறவுகள் கை தூக்கி விடும் என்பதெல்லாம் ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட வாசகங்கள் மட்டுமே..

 

அட டா ஏதோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேனே, மன்னித்துக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் நாம் எதையோ செய்யப்போக அறிவுரை சொல்கிறேன் என்கிற சாக்கில் நம்மை மடை மாற்றி விட்டு விடுவார்கள்.

 

திலகவதி ஐபிஎஸ்  கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே? தமிழகத்திதின் முதல் தமிழ்ப்பெண்  தலைமை காவல் இயக்குனர். அழகும் மிடுக்கும் கம்பீரமும் கொண்ட காவல் அதிகாரி. எண்பதுகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் திலகவதி. காவல்துறையில் எழுத்தின் மூலமாக அடையாளப் படுத்திக் கொண்டவர் அனேகமாக திலகவதி அவர்கள் மட்டும்தான் என கருதுகிறேன் .

 

நடக்க வேண்டுமே. ஒரு இலக்கிய விழாவிற்கு வந்தார் பேச சந்தர்ப்பம் அமையவில்லை. அடேங்கப்பா அப்போதைய மிடுக்கில் அவரைப் பார்க்க சொற்கள் போதாது. பிறகு காலம் கடக்க-அது மய்யம் தொடங்கிய போது நடந்து. பத்திரிக்கைக்கு அவரிடமிருந்து கவிதை பெறப்பட்டது. பத்திரிகைத்துறையிலும் இலக்கிய நிகழ்வுகளிலும் சதா ஆர்வமிகுதியில் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இவரை ஒருமுறையாவது பார்த்துப் பேசிவிட வேண்டும் என விரும்பினேன். அதன்பின் நேரில் சென்று பார்த்தேன் . எனது நூல்களை கொடுத்தேன். திலகவதி அவர்களிடம் அந்த சந்நிப்பின் துவக்கத்திலேயே மனதில் பட்டதை பேசக்கூடிய தருணமாகவும் அதை உள்வாங்கி இணக்கமான சொற்களோடு கணங்களை கடத்தவும் தெரிந்த அந்த அழகியலை இப்போது நினைத்தாலும் உயர்வாகவே உள்ளது.  திலகவதி அவர்களை பார்க்க வேண்டும் என்றால் உடனே அவரின் அலுவலகம் சென்று விடுவேன்.

 

இலக்கியம் குறித்த உரையாடல். ஒருமுறை ஓவியர் சந்துரு உடனான வரைகோட்டு ஓவியங்கள் மாடர்ன் ஓவிய விவாதம் நீண்டு கொண்டே இருந்தது. ஓவியர் சந்துரு நேர்மறை ஓவியப் போராளி. இன்னொருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன். முமேத்தா என ஆளுமைகளின் சந்திப்பும் சிந்தனையாக கடக்கும் தருணங்கள். பொதுவாக எனது நூல் வெளியீடு எனில் திலகவதி அழைப்பது முதன்மை எண்ணமாக இருக்கும். அப்படி ஒருசமயம் நிகழ்ந்தது.

 

காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் புத்தக கண்காட்சி . கற்பகம் பதிப்பகம் நல்லதம்பி அவர்கள் நான் எழுதிய வென்றிடப் பிறந்தவள் பெண் என்ற நூலை வெளியிடுகிறார் . திடீரென மூன்று நாள் இடைவெளியில் சொன்னார்.  ராசி நீங்க யாரையாவது கூப்பிடுங்க தேதி மேடை ரெடி என்று சொல்லி விட்டு போய் விட்டார். எழுத்தாளருக்கு வரும் சோதனை இது. பதிப்பாளர்கள் எப்பவுமே புத்திசாலிகள். இவ்வளவு நெருக்கத்தில் எவர் அழைத்தால் வருவார்கள்? கஷ்டகாலமே என்று முயற்சி செய்தேன். முதலில் என் மனம் திலகவதியைச் சொல்ல பேசினேன். விழாவுக்கு வரவேண்டும் என்றேன். இப்படி திடீர்னு சொன்னா எப்படி அன்னிக்கு சி எம் மீட்டிங் வேற இருக்கே என்றார். வரவேண்டும் என்பது என் விருப்பம் காலத்தின் கட்டாயம். என்றேன் . சரி என்று ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டார். பிறகு சொல்லாடலின் பேரழகு பர்வீன் சுல்தானா அமைச்சர் அருணாசலம் அவர்களின் துணைவியார் என அழைத்தேன். தங்கமங்கை மாத இதழில் ஆசிரியர் சக்திவேல் அன்பின்படி எழுதப்பட்ட அந்த நூல் வெளியீடு நிகழ்வுக்கு சரியாக ஜீப்பில் வந்து இறங்கி அழகாய் பேசி எனது துணைவியாரையும் பாராட்டி பெருமை சேர்த்த விதம் வேறு எவருக்கு வரும் என்று தெரியவில்லை. ஒரு நிகழ்வு.

 

மறக்கமுடியாத  சம்பவம் ஆகி விட்டது. ராஜலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில்  திலகவதி வரவேற்று கௌரவப்படுத்தி சிறப்பித்தோம். கமல்ஹாசன் பாராட்டினார். சிறந்த எழுத்தாளர்களை வருடம் தோறும் ஒருவருக்கு சிறப்பு சேர்ப்பது என்பதும் அதற்கான தேர்வில்  நான் உடனிருந்ததும்  உண்டு.

 

விழா நடந்தேறியபின் எழுத்தாளர் சு சமுத்திரம் அதை சர்ச்சைக்குரியதாக பேசி விட்டார். அதன் நீட்சியாக நீதிமன்றம் வரை அந்த பிரச்சனை நீளும் விதமாய்  அமைந்தது . அச்சமயத்தில் என்னை சு சமுத்திரம் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் உடனே மறுத்தேன். சார்  இந்த மனப்பாகுபாட்டிற்கு நான் பொறுப்பல்ல. ஒரு பெண் எழுத்தாளரை உயர்த்துவது காலத்தின் நேர்மை. அவசியம் . எழுத்தாளர்களின் மனக்கசப்பில் நான் ஊடுபயிறாக இருக்கமாட்டேன்  என்றும் சொன்னேன். சு சமுத்திரம் அதை உணர்ந்து கொண்டார்.

 

பொதுவாகவே பெண் படைப்பார்களை சமூக வெளியில் கொண்டாடவும் அவர்களின் எண்ணங்களை உணர்ந்து கொள்வதும் அவசியம் என்று கருதுகிறேன்.  தர்மபுரி குமாரசாமி பேட்டையில் பிறந்த பெண் தனது வாழ்வில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின் தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த மாமியாரைக் கடந்து மேற்படிப்பு படித்து உலகின் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு முன்னேறி தமிழகமே ஏன் உலகின் மாந்தர்கள் வியந்து பார்த்து உதாரணமாகத் திகழ்ந்த திலகவதி அவர்கள் நட்பும் அன்பும் எனக்கு மிகுதியாக கிடைத்தது என்பதே நிஜம். திலகவதியின் ஆளுமையை புரட்சித் தலைவி ஜெயலலிதா பலமுறை பாராட்டியதும் பெருமை கொண்டதும் நாடறிந்த உண்மை.

 

அவரின் தனிப்பட்ட வாழ்வின்  துயரங்களை வெளிப்படுத்தி எந்த அந் அனுசரணையையும் சமூகத்தில் தேடிக்கொள்ளவில்லை. அவர் அந்த வாழ்வியல் முரண்களை தனது எழுத்தால் சமூகத்தின் முன் நின்று கேள்வி கேட்டு விடையளித்த திண்மையவர்.

அலை புரளும் கரையோரம் என்ற கவிதை உடன் கல்மரம், கனவைச் சூடிய நட்சத்திரம், உனக்காகவா நான், கைக்குள் வானம், போன்ற நாவல்கள், வேர்கள் விழுதுகள் , சமதர்மம் பெண்ணியம், மானுட மகத்துவங்கள் போன்ற சிறுகதை நூல்களையும் எழுதி உள்ளார். அவரின் கல்மரம் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு 2005 இல் கிடைத்தது. சமேபத்தில் விவாதங்களில் சமூக அக்கறையுடன் பேசும் பாங்கு அவரின் அரசியல் நுட்பத்திற்கு சான்று. நான் என்எப்டிசிக்கு குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த சமயம் திலகவதி கதைகளை படமெடுக்கலாம் என தென்மண்டல அதிகாரி ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேசினேன். ஆனால் அந்த சமயத்தில் டைரக்டர் மகேந்திரன் இயக்கிய சாசனம் படம்  பொருளாதார சிக்கலுக்குள்ளானது. அதுமட்டுமல்ல மத்திய அரசு என்எப்டிசிக்கு பெரிய ஊக்கமும் தரவில்லை.

 

அங்கு பணியாற்றுபவர்களுக்கு சம்பளமே அவர்கள் அரசு ஒதுக்கும் விளம்பர குறும்படங்கள் புராஜக்ட் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நிலையிருந்தது. இல்லையென்றால் அப்போது படமெடுத்திருக்கலாம், இப்போதும் திலகவதி கதைகளில் திரைப்படத்திற்கான களங்கள் நிறைய உண்டு. கிரண்பேடியின் இடம் போல் திலகவதி அவர்கள் கொஞ்ச காலம்முன் தனக்கொரு இடம் வேண்டி இயங்கியிருந்தால் அது சாத்தியமே என்பதுதான் எனது கருத்து.

 

ஆர்சிசக்தி சிறை படம் இயக்கும்போது பத்திரிகையாளராக எனக்கு அதிக பழக்கமும் உண்டு. பெண் எழுத்தாளர்களின் படைப்பை படமாக்குவதில் பெருவிருப்பம் கொண்டவர். திலகவதியின் படைப்பை 1993 இல் பத்தினிப்பெண் என்று படமாக எடுத்தார்.

 

நான் சில சட்டபூர்வமான காவல்துறை நிகழ்வுகளுக்கு இவரிடம் சென்று ஆலோசனை கேட்கும் போது ஆர்வத்துடன் உதவுவார். விருமாண்டி சமயத்திலும் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் சமயத்திலும் காவல் அணுகுமுறைகளின் நுட்பங்களை கதைக்குத் தேவையான விதத்தில் உதவுவார். சொல்லப்போனால் அவர் திரைத்துறையில் எழுதி வெற்றியும் பெற்றிருக்கலாம் . ஏனோ அவர் இலக்கியத்தோடு திருப்தி அடைந்து விட்டார் என்று நினைக்கிறேன். நம் மேல் அன்பு கொண்டால் உரிமை எடுத்துக்கொள்வதும் அந்த சிக்கலில் இருந்து மீள முயலாமல் உதவுவதும் காலம் நம்முடன் நடத்தும் காட்சிகள்.

 

அப்படித்தான் தொண்ணூறுகளில் சேவாலயா என்ற பள்ளிக்கு நான் சென்று உதவுவதும் தனக்கு நெருக்கமான பிரபலங்களை அழைத்துச்செல்வதை கடமையாகக் கொண்டிருந்த நேரம். திலகவதியைக் கேட்காமல் ஒரு விழாவுக்கு அழைத்து வருகிறேன் என்று சேவாலயா முரளியிடம் சொல்லி விட்டேன். ஆனால் அதன்பின்புதான் பிரச்சனை அந்த தேதியில் முக்கிய நிகழ்வுக்கு அவர் செல்ல தேதி தந்து விட்டார். எனக்கு வார்த்தை கொடுத்த சங்கடம், என்ன என்றார்.

 

சேவாலயா தாயற்ற பிள்ளைகள் நீங்கள் வராவிட்டால் எப்படி என்றேன். சரி என்ற ஒற்றைச் சொல்லுக்குப்பின் சேவாலயா குழந்தைகளுடன் அவர் கிட்டத்தட்ட அரைநாள் செலவிட்டார். அன்பும் சொல்லும் மட்டுமே அவரின் நிரந்தர வெற்றிக்கு காரணம். 

 

திலகவதி அவர்களை என்னவென்று சொல்ல இப்போதும் இலக்கியம் நட்பு என்ற தளங்களில் முதன்மையாகத் திகழ்கிறார். காவல்துறைக்கும் கலெக்டருக்கும் நடக்கும் பனிப்போரை மய்யமாக வைத்து நான் இயக்கிய தேவராஜ் திரைப்படத்திற்கு வந்து பாராட்டியது நினைவு கூறத்தக்கது. அதில் பாலசந்தர், ஜேம்ஸ் வசந்தன், தாணு போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா விழாவில் வந்ததும் நீண்ட நேரம் இருந்ததும் பணியும் பொறுப்பும் நிறைந்த அக்காலத்தில் அவர் இதற்கு நேரம் ஒதுக்கியது அவரின் பேரன்பே காரணம்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...