???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 எஸ்.பி.பி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: எஸ்.பி.பி சரண் விளக்கம் 0 மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன்: அனில் அம்பானி 0 திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு 0 புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு 0 அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது! 0 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் 0 வேளாண் திருத்த மசோதா சட்டமானது! 0 ராஜிவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு 0 பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 0 திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை: போலீசார் விசாரணை 0 பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி 0 தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று 0 ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அபராதம்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   04 , 2020  00:12:46 IST


Andhimazhai Image

மொழி தெரிந்தால் அதில் ஆளுமை செலுத்த முடியும் என்று வெற்றி பெற்ற பிரபலங்கள் பலர் சொல்ல நான் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அது உண்மைதான் . நான் சென்று பேசும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே உரத்துப் பேசியிருக்கிறேன். ஆனால் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை.

 

எப்படி எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன். இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

 

ஆமாம் . தெலுங்குக்காரர்தான். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் , மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார் என்றால் நம்ப முடிகிறதா!

 

அறுபது வயதைத் தொடுகிற போது அபூர்வ சகோதரர் கள் படத்தை இயக்க ஒத்துக் கொண்டார். அந்த நேரம் கமல்ஹாசன் அவர்களுக்கு திரைவாழ்வில் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய நெருக்கடி இருந்தது.

 

அந்த சமயத்தில்தான் சிங்கிதம் சீனிவாசராவ் அந்தப் படத்தை இயக்க வருகிறார்.  கமல் ஹாசன் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் ஒன்று தன் கருத்துக்கு ஒத்துவரும் திறமையாளராக இருக்க வேண்டும் இல்லையென்றால் தான் வியக்கும் ஆளுமையாக இருக்க வேண்டும். இதில் இவர் எந்த வகை என்று யோசிக்க வேண்டாம். மயூரி என்ற படத்தில் சுதாசந்திரனை வைத்து பெரிய ரெக்கார்டு பிரேக் செய்தவர்.

 

சிங்கிதம் என்றால் அந்தப்படத்தில் ஏதாவது ஒரு பதிய விஷயம் கண்டிப்பாக இருக்கும். அவர்எப்போதுமே தன்னை இளமையான சிந்தனையிலேயே வைத்திருப்பார். அவரிடம் கமல்ஹாசன்  என்னை அறிமுகம் செய்து இவர் உங்களுக்கு துணை இயக்குனராக செயல்படுவார் என்று சொல்ல சிரித்தபடியே மன்ஜிதி (நல்லது) கை கொடுத்தார். அடுத்த நிமிடமே உட்காருங்கள் என்று அமரச் சொன்னார்.

 

நான் இருக்கட்டும் என்று கமல் அவர்களைப் பார்த்து தயங்கினேன். என்ன நினைத்தாரோ தெரியாது உட்கார்ந்தால்தான் உடன் பணியாற்ற வைப்பேன் என்றார். வேறு வழி அன்று உட்கார ஆரம்பித்ததுதான் அவர் உள்ளவரை அந்த சமரச மரியாதை நீடித்தது. அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இயக்குநர்கள் தம் முன் நின்று உதவி இயக்குநர்கள் பேசுவதை குருபக்தி பட்டியலில் சேர்த்துவிட்டனர். இதை சிங்கிதம் சீனிவாசராவ் முற்றிலும் உடைத்தார்.

 

ஒரு வசனம் கூட பேசாமல் சிறப்பு சப்தம், உடல்மொழி, இசை யை வைத்து மட்டும் புஷ்பக் அதாவது பேசும் படம் என்று இயக்கி பல மொழி படைப்பாளர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தார். பேக் டு தி பியூச்சர் பாணியில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ரோஜாவை வைத்து  ஆதித்யா 369 இயக்கினார் . பெண்டாமீடியா படமெடுத்த லிட்டில் ஜான் என்ற படம் இயக்கியவர்.

 

“அந்திமழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன்முகம் தெரிகிறது “

என்று வைரமுத்து எழுதிய பாடல் பிரபலமாக பேசப்பட்டதல்லவா.. அந்தப்படமான ராஜ பார்வை படத்தை இயக்கியது சாட்சாத் இதே சிங்கிதம் சீனிவாசராவ் தான். கன்னட பிரபல நடிகர் ராஜ்குமார் அவர்களுக்கு இவர் பிடித்தமான இயக்குனர். மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் என சுற்றிச் சுற்றி இயக்கியவர்.

 

அது அவருடைய பழக்கம். இப்போது எடுப்பது தமிழ்படம். நான்மட்டும்தான் தமிழ். கமல்ஹாசன் அறிமுகம் என்பதால் கூடுதல் மரியாதை . கதை திரைக்கதை கமல்ஹாசன் வசனம் கிரேஸிமோகன் எனவே எல்லா பணிகளிலும் முழு ஈடுபாடு அத்தியாவசிய மாகிவிட்டது. இதை யாவற்றையும் இயக்குனருக்கு தெளிவாகப் படித்து அர்த்தம் சொல்வதில் நிறையவே என்மீது பிரியம் ஏற்பட்டது. சுமுகமான சூழல் ஆரம்பித்து சென்று கொண்டிருந்த போதுதான் திடீரென சிக்கல் வந்து குதித்தது.  அட அதை சிக்கல்என்றுகூட சொல்லவேண்டியதில்லை.

 

அனுபவம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். என்ன அது? முதல் பத்து நாட்களில் அம்மாவ நான் காலத் தொட்டு கும்பிடணும் டோய் உங்க அக்காவ நான் கையெடுத்து கும்பிடணும் டோய் என்ற பாடலை வாலி எழுத இளையராஜா இசையமைத்து எஸ் பி பாலசுப்பிரமணியம் அருமையாக சென்னை பாஷையில் பாடி சுந்தரம் மாஸ்டர் டான்ஸ் சொல்லித் தர ஆழ்வார்பேட்டை வீனஸ் ஸ்டுடியோஸ் இல் படுஜோராக ஆறு நாட்கள் படமெடுக்கப்பட்டது.  ஆனால் இது வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படும் என்று படத்திலேயே சேர்க்கவில்லை. நூறு நாட்கள் படம் தியேட்டரில் ஓடியபின் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக சேர்த்து இடைவேளையில் காண்பிக்கப்பட்டது . அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

 

அவரிடம் நான் சேரும்போது ஐந்து சீனியர் அசோசியேட்ஸ் இருந்தனர். ஆனால் எல்லோரும் தெலுங்கு ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள். இயக்குனர் எந்த மொழியில் இயங்கினாலும் அவர்களை விடாமல் வைத்துக் கொள்வார். இப்போது டிஜிட்டல் கேமிராவில் படம் எடுக்கிறோம். அப்போது நெகட்டிவ்தான். ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு டேக்குக்கும் கிளாப் போர்டில் நம்பர் எழுதி காமிரா முன் காட்ட வேண்டும். அது எடிட்டிங் செய்யும் போது பயன்படும்.

 

இதே போல்தான் காட்சிகள் படமெடுக்கும்போதும்,. காட்சியை படமெடுக்கும்போது ஆரம்ப ஷாட்களில் துவங்கி இறுதி வசனம் வரை அந்தக்காட்சியை பிரித்து எப்படி குளோசப், மிடில் ஷாட், மாஸ்டர் ஷாட் என பிரித்து அதற்கேற்றவாறு நம்பர் தர வேண்டும். இல்லையென்றால் எடிட்டிங்கில் ஏக குளறுபடி ஏற்பட்டு விடும். இந்த நம்பரை யார் சொல்வார்கள் என்றால் வசனம் சொல்லித்தரும் பேர்டை வைத்திருக்கும் இணை இயக்குனர்தான் தான் சொல்வார்.

 

ஆனால் வசனம் சொல்லித் தந்து ஷாட் பிரித்து சொல்லும் நிலையில் எனது பொறுப்பு. ஒரு வசனம் பேசிவிட்டால் நம்பர் கொடுத்துவிட்டால் – அடுத்து பேசும் வசன பகுதிக்கு அடுத்த நம்பர் தந்தேன். இது சரிதான்.

 

ஆனால் மாஸ்டர் ஷாட்டில் எல்லா கதாபாத்திரங்களும் பேசி விடுவர். பிறகு மிட் ஷாட், சஜஷன் ஷாட், குளோசப் ஷாட் என எடுப்பர். அதற்கு தனி எண் அல்லது உட்பிரிவாக ஏ, பி, சி, டி என தருதல் அவசியம்.

 

அது எனக்கு அப்போது தெரியாது. ஒருமுறை வசனம் பேசிவிட்டால் திருப்பி ஏன் அதை பேச வேண்டும். ஆனால் டைரக்டர் திருப்பித் திருப்பி பேச வைக்கிறாரே, என்னாச்சு அவருக்கு? என்று நான் குழப்பமாக, கூட இருந்த சீனியர் என் நிலையை புரிந்துகொண்டு ஒருநாள் சாப்பாட்டு இடைவேளையில் ‘எத்தனை படம் வேலை செய்தாய்’ என்று கேட்டார்.

 

நானோ “இதுதான் முதல் முழுசாக” என சொல்ல அவர் வியந்து விட்டார். “உனக்கு எல்லாம் தெரியும் என்று டைரக்டர் நினைக்கிறார்”. “அய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லையே!”

 

“விடு… இதொன்னும் பெரிய சமாச்சாரமல்ல” என்று சமாதானப்படுத்தி காட்சிப் பிரிப்பையும், நுணுக்கத்தையும் அரைமணி நேரத்தில் சொல்லித்தந்தார்.

 

கப்பென பிடித்துக்கொண்டேன். டைரக்டரின் எதிர்பார்ப்பை நான் கடைசிவரை நிறைவேற்றினேன். இன்னும் சொல்லப்போனால் படத்தின் ஆதிமுதல் எடிட்டிங், டப்பிங், ரீ ரிக்கார்டிங், எபெக்ட்ஸ், மிக்ஸிங், சென்சார் வரை உடனிருந்து பணியாற்றும் சூழல் எனக்கு முதல் படத்திலேயே கிடைத்தது. அது இயக்குனரால்தான்.

 

 

சிங்கிடம் சீனிவாச ராவ்விடம் ஒரு நல்ல பழக்கம். அது என்ன என்றால்? படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதும் முதலில் ஏற்றி அனுப்புவார்கள். ஷூட்டிங் முடிந்து எல்லோரும் போனபின் பெட்போர்டோ, காரோ எதிலோ போங்கள் என்று மேனேஜர் அனுப்புவார். பேட்டா காசுக்கு கெஞ்ச வேண்டும்.

 

இதைப்பார்த்த இயக்குனர் உதவி இயக்குனர்களை தன் காரிலே ஷூட்டிங் முடிந்ததும் ஏற்றிக் கொண்டு அவரவர் இடத்தில் இறங்கிய பின் தன் வீட்டிற்குச் செல்வார். எல்லோரையும் போல உதவி இயக்குனர்களும் இருக்க வேண்டும் என கருதினார். அடுத்த நாள் ப்ளானை எல்லா டிப்பார்ட்மெண்டுக்கும் சாப்பாட்டு இடைவேளையின்போது தந்துவிடச் சொல்வார்.

 

உதவி இயக்குனர்கள் தவறு செய்தால் பிறர்குறை சொல்லவிடமாட்டார். அதேசமயம் தான் அதை எடுத்துச் சொல்லி சரிசெய்ய வழி வகுப்பார். திரைப்படம் என்பது ரசித்து செய்ய வேண்டிய தொழில், அதை இரவு – பகல் பாராமல் கிடந்து தவிக்கக் கூடாது என சொல்வார்.

 

பெரும்பாலும் இரவுக் காட்சிகளை தவிர்ப்பார். அவசியம் வேண்டுமெனில் இரவுக் காட்சிக்குப்பின் உறங்க அடுத்தநாள் படப்பிடிப்பு வேண்டாமென்பார். எதையும் திட்டமிடுவார். எதையாவது எடுப்போம் என நினைக்கமாட்டார்.

 

 

காமெடி வசனங்களை பக்கம் பக்கமாக படித்துக் காண்பித்த பிறகு சட்டென சொல்வார். எனக்கு எட்டுவரியில் இந்த சீன் போதும். ஏனென்றால் காட்சிக்கு லாஜிக்காக அவ்வளவுதான் டைம் என்பார். எவரின் பாதிப்புக்கும் ஆளாகமாட்டார். ஆனால் சொல்வதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் போய்விடுவார். பல சமயம் அவரின் ஆளுமையை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன்.

 

இப்போது அவருக்கு வயது எண்பது இருக்கும். இப்போதும் அதே முன்முயற்சியில் ஈடுபடுகிறார். புதியனவாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்.  மகளிர் மட்டும் படமெடுத்த பிறகு பாடல் அறிமுகக் காட்சியும், டைட்டில் சாங்கும் எடுக்க வேண்டும். அந்தப் படத்தில் திரு தான் காமிரா அறிமுகம். பி.சி. ஸ்ரீராம் முன்மொழிந்தார். ஹே ராம் படத்தில் திரு அசத்தியிருப்பார்.

 

திருவும் நானும் தான் பல இடங்களில் சென்று “மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா” பாடலை படமெடுத்தோம். இதேபோல அந்தப்படத்தில் பெசண்ட் நகர் பகுதியில் தூத்துக்குடி பெண் ட்ரைவரோடு ரேவதி, ஊர்வசி, ரோகிணி பேசுகிற காட்சி படமெடுத்தோம். காரணம் இயக்குனரின் மாமனார் திடீரென இறந்துவிட்டார் போக வேண்டுமென ஷூட்டிங் பேக்கப் செய்யாமல் என்னை இயக்கச் சொன்னார். இப்படி பல விஷயங்கள்… அவர்மேல் உயர்வான மதிப்புவரக் காரணம்.

 

அவரிடம் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் என மூன்று படங்கள் பணியாற்றினேன்.

 

குரு என்பதற்கான மேன்மை சிங்கிதம் சீனிவாசராவ்விடம் முழுமையாய் உண்டு.

 

இரவும் பகலும் மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு வேலை செய்ததன் பலன் தீபாவளிக்கு முதல்நாள் அழைத்து பரிசு தந்தது. நாகேஸ்வரராவ் சீனியர் வரும் வழியிலேலே “என்னதான் தந்தார்” என பிரித்துப் பார்த்தது தனிக்கதை.

 

எப்போதும் இளமையாகச் சிந்திக்கின்ற சிங்கிதம்… எனது பயணத்தின் பசுமை வனம்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...