???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்: ஆர்.கே.செல்வமணி

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  00:55:22 IST

பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.
 
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, "திரைப்பட தொழிலாளர்களுக்கு (பெப்சி) சென்னையை அடுத்த பையனூரில் அரசு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் 15 ஏக்கரில் புதிதாக ஸ்டூடியோ கட்டப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.
 
இந்த ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த ஸ்டூடியோவை ஜூலை மாதம் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
 
அங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்" என தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...