???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காசெம் சுலைமானி படுகொலையால் ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   03 , 2020  06:28:17 IST


Andhimazhai Image
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த காசெம் சுலைமானி, அமெரிக்காவின் எதிரியாக கருதப்பட்டார்.
 
முன்னதாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலை மீது ஈரான் ஆதரவு அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக  பாக்தாத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் செல்வாக்குமிக்க படை தளபதியான காசெம் சுலைமானி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
 
காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு ஈரான் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் ட்விட்டரில் இதுகுறித்து சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார், "பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராகப் போராடி வந்த தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதத்தை உணர்த்துகிறது. இதற்கான விளைவை அமெரிக்கா நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென" அவர் எச்சரித்திருக்கிறார்.
 
''காசெம் சுலைமானி உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடுமையான பழிவாங்கப்படுவார்கள். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான எங்களது நிலைப்பாட்டை இது இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது'' என்று ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார். ஈரான் தொலைக்காட்சிகளில் காசெம் சுலைமானியின் மரண அறிவிப்பு கறுப்பு ரிப்பனோடு ஒளிபரப்பபட்டது. அரசின் மூன்றுநாள் துக்க அனுசரிப்பும் ஈரானில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 
இதனிடையே. ”ஈரான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போரை அறிவித்துள்ளது என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக் போன்ற நாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவது மேற்கத்தியர்களுக்கு சிறந்தது என்றும் தெஹ்ரானை சேர்ந்த ஆய்வாளர் முகமது மராண்டி தெரிவித்திருக்கிறார். காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்காக தொடர்ந்து பல்வேறு மத்திய கிழக்கு நாட்டு தலைவர்கள் அமெரிக்காவுக்கு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...