தொடர் கனமழை காரணமாக புழல் ஏரி நிரம்பியுள்ளதால் இன்று காலை 10 மணிக்கு உபரி நீர் திறக்கப்படவுள்ளது.
கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 21 அடியில் 19.2 அடி நிரம்பிவிட்டதால் இன்று காலை 10 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு ஏரியான செம்பரம்பாக்கத்திலிருந்து ஏற்கனவே 573 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் மகேஷ்வரி ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.