???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு 0 அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 வீட்டில் இருந்த துப்பாக்கியால் விபரீதம்: திருச்சி மாணவர் பலி 0 முத்தலாக் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் வரவேற்பு 0 புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர். 0 கருணாநிதியை இன்று சந்திக்கிறார் வைகோ!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வறட்சியால் வறண்டது புழல் ஏரி.

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  01:56:47 IST

சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும்  நான்கு ஏரிகளில் கடைசி நம்பிக்கையான புழல் ஏரியும் முழுமையாக வறண்டது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான வீராணம் ஏரி வறண்டு போனது. கிருஷ்ணா கால்வாய்க் குடிநீரும் நின்றுபோனது. இதனால் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மூன்று ஏரிகளும் வறண்டு போன நிலையில் புழல் ஏரியிலிருந்து மட்டும் குடிநீர் தேவைக்காகத்  தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் புழல் ஏரியும் வறண்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி முற்றிலும் வறண்டு ஜீரோ மில்லியன் கன அடியைத் தொட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அனைத்து ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 124 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பதால், இனி வரும் நாட்களில் பலத்த மழை பெய்து ஏரிகளில் தண்ணீர் பெருகினால் மட்டுமே சென்னைக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்க முடியும் என்கிற நிலை தற்போது  ஏற்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...