???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   26 , 2020  21:56:45 IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்தநிலையில் இந்த ரயில் மறியல் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதற்கிடையில் நேற்றுடன் முடிவதாக இருந்த இந்த ரயில் மறியல் போராட்டத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் ரயில் சேவைகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...