செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மரணம்: நிதியுதவி அறிவித்தார் பஞ்சாப் முதலமைச்சர்
போராட்டத்தில் மரணம் அடைந்த 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மரணம்: நிதியுதவி அறிவித்தார் பஞ்சாப் முதலமைச்சர்
Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 03 , 2020 23:57:10 IST
போராட்டத்தில் மரணம் அடைந்த 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதில் பங்கேற்ற பஞ்சாப் விவசாயி குர்ஜன்சிங் என்பவர் மரணம் அடைந்தார். இதேபோல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி குர்பசன் சிங் என்பவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
2 விவசாயிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
|