???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீர் புகைப்படக்காரர்களுக்கு புலிட்சர் விருது!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   05 , 2020  09:29:58 IST


Andhimazhai Image
இந்த ஆண்டுக்கான புலிட்சர் புகைப்பட விருது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர்கள்  மூவருக்குக் கிடைத்துள்ளது. அசோசியேட்டர் ப்ரெஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களான தர் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்து ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றுள்ளனர்.  காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு நிலவிய அசாத்திய சூழலில் இவர்கள் எடுத்த படமே விருதுக்குத் தகுதியானதாக தேர்வாகிஉள்ளது.
புலிட்சர் அமைப்பின் நிர்வாகி டானா கேனடி, யூட்யூபில் லைவ் மூலமாகத் தோன்றி வெற்றியாளர்களை அறிவித்தார்.
 
பொதுவாக புலிட்சர் விருதுகள் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கே வழங்கப்படும். இம்முறை காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
மக்களின் எதிர்ப்புப் போராட்டம், காவல்துறை, துணை ராணுவ நடவடிக்கைகளை இந்த புகைப்படக்காரர்கள் துணிச்சலுடன் ஊரடங்கை மீறி எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை அனுப்ப முடியாமல் விமான நிலையம் மூலம் டெல்லி செல்லும் பயணிகளிடம் கோப்புகளைக் கொடுத்து டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
 
யாசின், கான் இருவரும் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் ஜம்முவைச் சேர்ந்தவர்.
இந்த மூவரும் இந்த விருதுக்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காஷ்மீர் அரசியல்வாதிகளான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
ராகுல் காந்தி, இந்த விருதுக்காக பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தார். இதை அடுத்து பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு புகைப்படத்தின் குறிப்பில் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இருப்பதைக் குறிப்பிட்டு இதுதான் காங்கிரசின் நிலையா என்று கேட்டுள்ளார். இப்படியும் ஓர் அரசியல் இந்த விருதின் பின்னால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...