அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 72 - மின்னற் பின்னதாம் மழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   29 , 2018  22:28:48 IST


Andhimazhai Image
மலையாள மனோரமா இயர்புக் 2017இல் வெளியான தமிழின் முக்கியமான கட்டுரைத் தொகுதிகளின் பட்டியலில் புலன் மயக்கத்தை உட்படுத்தி இருக்கிறது. தானாய்த் தான் மலரும் நல்மலர்கள். இன்னும் மலரும்.
 
 
சிலைக்கு ஏன் அத்தனை மரியாதை..? சிலை செய்வதன் கஷ்டம் சொல்லில் அடங்காதது. எந்த நிலையில் தவறு நேர்ந்தாலும் அதுவரைக்குமான உழைப்பும் முயற்சியும் எத்தனமும் இன்னபிற எல்லாமும் அப்படியே வீணாகிவிடும் என்பது சாதாரணமல்ல. உளவியல் ரீதியாக மாபெரிய உறுதியும் கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே ஒரு சிலையை முழுமை பெறச் செய்ய முடியும். சிற்பி தன் உளியைக் கீழே வைக்கும் அந்த ஒரு பொழுது தான் பொன்வைர மின்னற்காலம். அந்த ஒரு கண நேரத்திற்காகத் தான் முந்தைய பெருங்கால எத்தனமும். ஆமாம். இந்த சிலையை நான் முடித்து விட்டேன் என்று அவன் திருப்தியுறுவது ஒற்றை நிகழ்வல்ல. காலமும் சரித்திரமும் ஒன்றுகூடுகிற புள்ளியில் மூன்றாவது அலகு சிற்பியின் தோன்றல்.
 
 
ஒச்சமற்று இருத்தல் சிலைக்கான லட்சணம். சிற்ப சாத்திரங்கள் அறிந்தவர்கள் நுட்ப நுணுக்கமாய்ப் பார்க்கும் போது அவர்களது அவதானத்தில் உருவாகக் கூடிய விமர்சன பிம்பம் என்பது உள் ஆழம். வெளிப்படையாக எதுவும் தெரியாத அதிதிப் பார்வையில் முடுக்கேதும் இல்லாமல் இருப்பது அதி அவசியம். மேலும் அது தான் சிலைவாழ்வின் ஆரம்பமும் கூட.
 
 
பாடல் என்பது நிகழ்த்தப்படுகிற ஒன்று. அது தன்னைக் கொண்டாடுகிற ஒருவனை எப்போது வந்தடையும் என்பது சுவையான ஆருடம். ஒரு படம் வெளியாவதற்கு சில காலம் முன்பே பாடல் வெளியாவது அதன் வழமை. படம் வந்து ஓடி முடித்த ஒரு நாள் அதன் பாடலைக் கேட்க வாய்ப்பதை எப்படிச் சொல்வது.? எது எப்போதோ, அது அப்போது இல்லையா..?
 
 
ஒரு பாடல் நிகழ வேண்டும். ஒச்சமற்ற ஒரு பாடல் அபூர்வம். அதன் வணிக வெற்றி இன்னபிற எல்லாவற்றையும் தாண்டிய நீட்சி அவற்றுக்கு உண்டு. அப்படி நிகழ்கிற பாடலின் கண்களைத் திறந்து வைப்பது அதன் துவக்க இசை. துவக்க இசை ஒரு பெரிய அனுபவத்தின் முன் கட்டியமாக நிகழலாம். அல்லாது போனால் பின்னே வரக் கூடிய யானையை யூகிக்கவிடாத சின்னஞ்சிறிய மணிச்சப்தமாகவும் இருக்கலாம். இவை ஏதுமற்ற வேறு அனுபவம் எப்படி இருக்குமென்றால் உள்ளே நிகழ்வதை யூகிக்க முடியாமல் செய்வதற்காக ஏற்படுத்தப்படுகிற வெளித்தோற்ற மாயைகளின் திட்டமிட்ட வருகையுடன் இருக்கும்.
 
மிகச்சிறந்த பாடல் இவற்றில் எப்படி வேண்டுமானாலும் தொடங்கும்.
 
அடுத்த லட்சணம் என்ன.? ஒரு பாடலின் முதல் வரி.
 
பல பாடல்களின் முதல்வரிகள் சரித்திரத்தின் முன் மண்டியிட்டுக் கெஞ்சுபவையே. சிற்சில தான் தப்பிப் பிழைக்கின்றன. அப்படிப் பிழைப்பவையே பல ஆயிரம் உண்டு. இதென்ன முரண். ஆம் அய்யா.. ஒவ்வோராண்டும் வெளியாகிற ஆயிரக்கணக்கான பாடல்களில் தகுதி கொண்டு தப்புகிறவை ஒரு நூறு என்று கொள்ளலாம். அப்போது கணக்கு சரிதானே.?
 
 
தூங்காத விழிகள் ரெண்டு, என் இனிய பொன் நிலாவே, அந்தி மழை மேகம், நீ ஒரு காதல் சங்கீதம், கல்யாணத் தேன் நிலா, குங்குமப் பூவே கொஞ்சுபுறாவே, செந்தூரப் பூவே செந்தூரப்பூவே, கண்ணாலே மியா மியா  இவையெல்லாம் ஜஸ்ட் சாம்பில்கள். சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பாடலின் துவக்கம் என்பது மேட்ச் தொடங்கிய முதல் ஓவரில் அடிக்கப்படுகிற சிக்ஸர் போன்றது. அல்லது முதல் ஓவரில் வீழ்த்தப்படுகிற விக்கெட் போன்றது. இவ்விரண்டுமே மடியிலும் மனதிலும் தீ வைக்கும் அல்லவா.?
 
 
சுழலிசைப் பாடல்கள் எப்போதுமே சொக்கத் தங்கம். சுழன்று முடிந்து மீதொடரும் அதன் வகைமை அவற்றின் தனித்துவம்.
 
 
ஆரம்ப இசை மின்னலுடைய வருகைக்குப் பிந்தைய மழை பற்றிய எதிர்பார்ப்பைப் போன்றதாக அமைவது வரம். ஒரு பாடலைப் பாடிய குரல்கள் அடுத்த காரணம். ஆன்மாவின் நீர்மத்தில் பாடலின் வார்த்தைகளை அலசி எடுத்து உதடுகளால் அர்ச்சிக்க வேண்டும். ஒரு வேட்டைக்காரனின் ஏமாற்றம் போல மிக மெல்லிய சமரசத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் பிடிவாதம் போன்ற விடாவெறியுடன் பாடலைக் கொண்டு செலுத்த வேண்டும். ஒரு மீனவனின் உலகமொத்தமும் நனைகிறாற் போல இயல்பாக விரவ வேண்டும்.
 
 
அப்படி ஒரு பாடல் எனக்குள் சமீபத்தில் தன்னை நிகழ்த்திற்று.
 
 
கொள்ளாத அச்சங்கள் கொண்டாடுதே
 
 
என் கையைக் கோர் யவ்வனா
என் நெஞ்சில் சேர் யவ்வனா
என் வார்த்தை கேள் யவ்வனா
என் வாழ்வே நீ யவ்வனா
என் வானே நீ யவ்வனா
திரன திரன திரனா
 
எங்கேயும் செல்லாதே
என்னாளும் நில்லாதே 
 
 
யாஸின் நிஸார் நான்கு மொழிகளிலும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் பல பாடல்களைப் பாடி வந்திருந்தாலும் சத்யா திரைப்படத்தில் சைமன் கிங் இசையில் மலர்ந்திருக்கும் இந்த யவ்வனா பாடல் தான் அவருக்கான பெரும் வெளிச்சம் என்று கொள்ள முடியும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்து வருடங்களுக்குள் இந்தியாவின் மாபெரும் விருப்பக் குரலாக யாஸின் நிஸாருடைய குரல் இருக்கப் போகிறது. ஆண்மையின் கம்பீரமும் பதின்ம உலகின் குழைதலும் ஒருங்கே இணைகிற வெட்டுப்புள்ளியில் தொடங்குகிற இத்தனை அழகான குரலை சமீபத்தில் கேட்டு விடவில்லை.
 
 
தன் குரலால் யாரையும் ஆக்ரமித்து விடுகிற வல்லமை கொண்ட பூரணமான குரல் யாஸினுடையது. இந்தப் பாடலின் சுழல் தன்மை வரிகளை ட்விஸ்டர்களை அவர் மேலெடுத்த விதம் அதிலும் என் கையைக் கோர் யவ்வனா எனும் போது உலகம் அதற்கு முன்பிருந்த அத்தனை ஞாபகங்களையும் எரித்து விடுகிறது.என் நெஞ்சில் சேர் யவ்வனா என்ற இடத்தில் எல்லாப் பூட்டுக்களும் திறந்து கொள்கின்றன. என் வார்த்தை கேள் யவ்வனா என்ற போது வேறு வகைமைகள் அற்ற ஒற்றைப் புள்ளியாகத் தன் ஆன்மாவின் அழைப்பிதழாகத் தன் குரல்வழி சொற்களை நம்பச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது. என் வாழ்வே நீ யவ்வனா எனும் போது உண்மையான சரணாகதி நிகழ்ந்து விடுகிறது.இத்தனை வலுவான பல்லவி சமகாலத்தில் நிகழ்ந்திடவே இல்லை.
 
 
இந்தப் பாடல் ஒரு முழுமையான ஆல்பம். கல்யாணி நாயரின் குரல் மிக அழகான அண்டர்ப்ளே. முழுவதுமாக நீ அடித்து ஆடு. நான் அவ்வப்போது ஒவ்வொரு ரன்னாய் எடுக்கிறேன். அதை விட இந்த பக்கத்தை அடைத்துக் கொண்டு நிற்கிறேன் என்ற விட்டுக்கொடுத்தல் கிரிக்கெட் பங்காளித் தன்மையோடு ஒரு பாடலின் குரலிணை இருப்பதை அதிகதிகம் ரசிக்க முடிகிறது. யாஸின் ஒவ்வொரு முறையும் என் கையைக் கோர் யவ்வனா எனும் போதெல்லாம் மனம் முன்பற்ற புதுவழியில் உடைந்து மலர் சொரிகிறது.
 
 
ஒரு பாடகனோ பாடகியோ முன்னர் பாடிய சூப்பர்ஹிட்டிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். அது தான் முக்கியம்.ஷான் ரோலடனுடன் கல்யாணி இணைந்து பாடிய எம்புட்டு இருக்குது ஆசை என்கிற மென் மெலடி பாடல் சரவணன் இருக்க பயமேன் படத்துக்காக இமான் இசைத்தது. அதன் வழங்குதலில் இருந்து முற்றிலுமாக வித்யாசப் படுத்தியதில் தொடங்குகிறது கல்யாணியின் குரல்வெற்றி. அதிலும் அவரது முதல் சில பாடல்களில் ஒன்றான பக்பக் பக்பக் மாடப்புறாவின் வாசனை அவ்வப்போது பிறமற்ற பாடல்களில் வந்து கொண்டு தான் இருந்தது. இதனை கல்யாணியின் பாடல்களின் மீது எளிதாக சுமத்த வாய்ப்புள்ள குற்றச்சாட்டாகவே மொழிய முடியும். இதற்கு இன்னொரு காரணம் கல்யாணி நம்பர்ஸ் சிங்கர் அல்ல. அவர் மொத்தமே ஐம்பது பாடல்களைக் கூட இன்னும் தாண்டவில்லை என்பதால் பெருவாரிப் பாடல்கள் தனித்தொலிக்க வல்லவை. இதுவே அவரது பலபலவீனங்களாவதும் உண்மை.
 
 
தன் முந்தைய இரண்டு படங்களில் அத்தனை வெளிச்சத்துக்கு வராத சைமன் கிங் இந்தப் படத்தின் மூலம் வெளியே தெரிவது மாத்திரமல்ல. ஒரு கலைஞன் அவன் எதிர்காலத்தைக் குறித்த சின்னதொரு நம்பிக்கையை ஒரு எதிர்பார்த்தலை நிகழ்த்தினால் போதும். பெரும் வெற்றி பின்னால் வந்தே தீரும்.
 
 
எல்லாருக்கும் மேலாக இந்தப் பாடலைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு இன்னுமோர் நபர் மதன் கார்க்கி. வைரமுத்துவின் மகன் என்ற அடையாளத் தொடக்கமே அவருக்கான பலவீனமாகவும் அவர் மீதான எதிர்பார்த்தலைப் பன்மடங்கு அதிகரித்து விடுவதும் இயல்பு. அதனைத் தாண்டிய முற்றிலும் புத்தம்புதுச் சொற்களைக் கொண்டு தன் அழுத்தந்திருத்தமான சூப்பர்ஹிட்டாக இந்த யவ்வனாவைப் படைத்திருக்கிறார் கார்க்கி.
 
 
முற்றிலும் புதிய டீம். புத்தம் புதிய சொற்கள். சவாலிசை. அட்டகாசமான குரல்கள். சப்தமேக்கர்களின் வருகை ஏற்படுத்தி விட்டிருக்கிற கலாபூர்வ அச்சங்களுக்கு நடுவே நம்பிக்கை தருகிற நல்லதோர் ஒளிக்கீற்று சத்யா திரைப்படத்தில் மதன் கார்க்கி எழுதி சைமன் கே கிங் இசை அமைப்பில் கல்யாணி நாயருடன் யாஸின் நிஸார் இணைந்து பாடி ரம்யா நம்பீஸனுடன் சிபி சத்யராஜ் தோன்றுகிற என் கையைப் பார் யவ்வனா கடந்த பத்து வருடங்களில் வெளியான தமிழ்ப் பாடல்களில் ஒரு அட்டகாச அற்புதம்.
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...