???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம்- 96 காலத்தின் முகங்கள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2018  02:53:41 IST

பாடல் கேட்பதென்பது ஒரு மனோநிலை. கொஞ்சம் அதிகமாகத்தான் பாடல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனால், பண்டமய உலகில் பாடல்கள் தங்களது இருப்பை எத்தனை கடினங்களுக்கு மத்தியில் தக்கவைத்துக் கொண்டு வருகின்றன என்பதைப் பேசாமல் ஒதுக்கக் கூடாதல்லவா? பாடல்களின் வருகை ஒரு மேலதிகத்தைக் கையாளுவது போலவே அழையா விருந்தாளிகளை உபசரிப்பது போலவே ஒரு தேவையற்ற தேவையாகவே கருதப்படுவதும் நிசம். பாடல்களை ஆராதிப்பதும் பாடல்களிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பதும் இரு வெவ்வேறு மனவடிவங்கள். இக்கரைக்கு அக்கரை பச்சையா எனத் தெரியாது, இரண்டும் எதிரெதிர் கரைகள், தட்ஸிட்.முதல் முதலில் பாடல்கள் இல்லாத படம் என்று பார்க்க நேர்ந்தது 'அந்த நாள்'. பிற்பொழுதுகளில் கமல் நடித்த 'பேசும்படம்', சத்யராஜின் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ஞான ராஜசேகரனின் 'முகம்', மிஷ்கின் எடுத்த 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', மது இயக்கிய 'ஏர்போர்ட்', மணிகண்டன் ((வெரிஃபை)) 'குற்றமே தண்டனை' என்று பாடல்கள் அப்புறப்படுத்தப்பட்ட படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நரியைப் பரியாக்குதல் என்பார்களே, இல்லையா தேங்ஸ் என்றும், இருந்திருக்கலாம் என்றும் இருவேறு எண்ணத் தோன்றல்கள்.2013 ஆம் ஆண்டில் வெளியான  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பல காரணங்களுக்காக தமிழில் முக்கியமான படவரிசையில் இடம்பெறவேண்டியதாகிறது.கதை என்பதிலிருந்து திரைக்கதை ஆக்கம் மூலமாய்த் திரையிற் பெயர்க்கப்படுவது வரைக்கும் இந்திய சினிமாக்களின் பெருந்தொகையில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படமாக்கல் தீவிரமான மற்றும் அழுத்தமான வேலைப்பாடு.துயரம் என்பதன் இசைமயக் குறிப்புகளை இந்த அளவுக்கு இன்னொரு படத்தில் தொகுத்து வழங்கியதில்லை என்று சொல்லத் தகுந்த அளவுக்கு இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வை இருந்தது.விட்டு விலகித் திரும்புகிற முகடுகளுக்கு இடையிலான கணக்கற்ற காற்றலைதல் கணங்களினூடாக ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்கணங்களை வரிசைப்படுத்தினாற் போன்ற குறிப்புகளை எடுத்தாண்டார் ராஜா.பெரு மழைக்காலம் ஒன்றில் வருகை குறைந்த சுற்றுலாத் தலத்தில் அதே ஊரைச் சேர்ந்த மக்களுக்கும் அத்தகைய தலங்களுக்குமிடையிலான மௌனத்தைப் பொதிந்த உரையாடல் ஒன்றுக்கிணையான அரிதான பரிவு ஒன்றை அர்த்தப்படுத்தினாற் போன்ற நகர்தல்கள் பரவசம் தருபவை.
    


பாடல்கள் உண்மையில் நுழைக்கப்படுகின்றன என்பதே அடியேனின் தாழ்ந்த அபிப்ராயம். தியேட்டர்களின் இருள் காதலுக்கு ஊக்கத்தையும், பாடல்களின் வெளிச்சம் புகைபிடிப்பவர்களுக்கான வெளிகளையும் தொடர்ந்து உண்டுபண்ணிக் கொடுத்தன. அது ஒரு மாதிரியான ப்ளாக் அவுட்டைப் போலவே பின்னர் டிவியில் பார்க்கையில் இது எந்தப் படம் என உற்று நோக்கி, ஓ நாம் எஸ்கேப் ஆகிப் போயிருக்கோம் போல என்று மனப் பிராந்தி தீர்ந்ததும் உண்டு. படம் எடுத்த உடனே பாட்டு என்பது ஒரு வகையில் லேட் கமர்ஸுக்கான இச்சிலி பிச்சிலி. அதுவே, இன்டர்வல் முடிந்த உடன் பாட்டு என்பது சுச்சா  லுல்லா நேரத்தைக் கூடுதலாக்கித் தருவதும் இன்னொரு ஏற்பாடு. க்ளைமாக்ஸில் ஏன் படம் முடிந்ததற்குப் பின்பு கூடப் பாட்டு வந்திருக்கிறது.


'தூள்' திரைப்படத்தில் வன்முறைக் கிழவியார் பரவை முனியம்மாள் அவர்கள் வெறியேற்றுவதற்காகவே பாடிய "சிங்கம் போல" என்ற பாடலைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் விவேக்கைத் தவிர சக நடிகர்கள் அனைவரையும் நொறுக்கி அடித்து அடித்து நொறுக்குவார். இப்படியெல்லாம் பாடல்களின் முன் பின்னாய் என்னென்னவோ நிகழ, நிஜத்துக்கும் புனைவுக்குமான ஒரு எதிர் எதார்த்தமாகவே பாடல்கள் திரும்பத் திரும்ப செருகப்பட்டன. மேலை நாடுகளில் சினிமாவை ஒட்டிய ஆல்பங்களும், தனித்த கதை சொல்லல் சினிமாக்களுமாக இரண்டு வெவ்வேறுகளாய் திரைப்படம் வகுபட்டு இருப்பதைச் சொல்லத் தோன்றுகிறது.பாடல்கள் என்ன பண்ணுகின்றன? எதற்காக பாடல்கள்? சலனப் படத்திலிருந்து வசன படமாக மாறிய பிற்பாடு நியாயமாக அடுத்த காலத்தை வசனம்தானே ஆக்கிரமித்திருக்க வேண்டும்? ஏன் பாடல்கள் ஆக்கிரமித்தன? இப்படி யோசித்தால் பாடல்களின் எழுச்சி ஏற்படுத்தப்பட்ட செல்வாக்கு என்பதை உணர முடியும். பாடல்கள் என்பவை மேற்கத்திய படங்களுக்கும் பிற ஆசிய பிராந்திய படங்களுக்கும் இந்தியப் படங்களுக்கும் இடையிலான நிலப் பூர்வ வித்தியாசம் என்றால் தகும். ஏன் என்பதற்கான பதிலாக அதுவே ஆகையிலெல்லாம் அவை வேறொன்றின் சிலவற்றின் பலவற்றின் வேறுபாடுகளாக அமைந்துவிடுவது இயற்கை. ஆக, ஏன் பாடல்கள் என்பதற்கும் அதனால் பாடல் என்று பதில் தோன்றுகிறது.பாடல்களுக்கு மறுவருகை இல்லை என்றே தோன்றுகிறது. சிலபல படங்கள் மீவுரு செய்யப்பட்ட போதிலும் அவற்றின் பாடல்கள் கைவிடப்பட்டன, புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டன. மீவுரு செய்கையில் தேவைப்படுகிற மறுநிர்மாணிக்கப்பட்ட நம்பகம் ஒன்றை அதே பாடல்கள் ஏற்படுத்தத் தவறின. காலத்தால் பாடல்கள் மாத்திரம் பின் தங்கிப் பழைய முகங்களையே நினைவுபடுத்தின. பாடல்களுக்கு இரண்டாம் வருகை இல்லவே இல்லை. ஒரு நடிகர் அல்லது நடிகையின் பாத்திரவழிப் பரிமாணம் அடுத்த காலங்களில் மேலெழுதப்பட்டுச் சிலாகிக்கப்படுகிற அளவுக்கு அவர்களது தோற்ற எழில் போற்றப்படுவதே இல்லை. பழைய காலத்தின் முகங்களாக முந்தைய ராஜா ராணிகளாக அவர்களது எழில்கள் கைவிடப் படுகின்றன. சினிமாவின் புத்தம்புதிய தன்மையும் அதன் எழிலும் இன்று தொடங்கி நாளை முடிவதாகவே எப்போதும் பார்த்துக் கொள்ளப் படுகிறது. பழைய காலங்கள் எப்போதும் ம்யூட் செய்யப் படுகின்றன.


   தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே எனத் தொடங்கும் பாடல் எம்கேடி எனும் மூன்றெழுத்து மகானின் திறனுக்கு துளித் தேன் சான்று. தமிழ் வானத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர். பரணி அடிக்கடி சொல்வான் பாகவதர் வாழ்க்கையே ஒரு ஸ்க்ரீன்ப்ளே டா.அதை அப்படியே திருத்தாம கொள்ளாம படமெடுக்கலாம் என்று. சிந்தித்தால் சினிமாவிற்கு உள்ளேயும் புறத்தேயும் சிலரது வாழ்க்கைகள் ஸ்க்ரீன் ப்ளே கச்சிதத்தோடு நிகழ்ந்து விடத் தான் செய்கின்றன.


  இந்தப் பாடலின் காலத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறோம்.முதிய மனிதனொருவரின் புகைப்பட ஆல்பத்தின் கல்யாணக் கோலம் போன்று ஒலிக்கிறது இந்தப் பாடல்..எத்தனை தூரம் வாழ்வுகளின் அருகாமையில் இரண்டறக் கலந்திருந்தது முன்னொரு காலத்தில் என நினைக்கையில் மனம் நெகிழ்ந்து கலங்குகிறது.


தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே


நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஆதியந்தம் இல்லா ஹரனே ஆ... ஏ..ஆ.. ஆஆ..
ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே.
 
 பழைய பாடல்கள் காலத்தின் முகங்கள்.இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிற இந்த நிமிஷத்தின் பாடல் இன்னும் மிகச்சரியாக எண்பதாண்டுகள் கழித்து என்னவாகக் கேட்கப்படும்..?யூகிக்க முடிகிறதா..?
 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...