???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 95 மூன்று மேதைகள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2018  04:02:18 IST


1.ஃபெலா குட்டி
அபாயத்தின் கடவுள்

நான் எப்போதெல்லாம் மனிதனாக இல்லையோ அப்போதெல்லாம் இசையை நாடுவேன். நான் எப்போதெல்லாம் என்னை விட்டு வெளியேற உத்தேசிக்கிறேனோ அப்போதெல்லாம் இசைவழி ஊடாடுவேன்.நான் என்ற ஒருவன் இல்லாமற் போகையில் என்னைத் தேடாதீர்கள்.கிட்டாப் பொழுதொன்றின் தொடக்கத்தில் ஏதேனுமொரு இசைக்குறிப்பாக என்னை மாற்றிக் கொள்வேன். நிரந்தரித்தலுக்கான சூட்சுமம் இசை என்பதை ஒருவருக்கும் சொல்லித் தராதீர்கள். இசை என்பது அபாயத்தின் கடவுள்.


 ஒலூஃபெலா ஒலுசெகன் ஒலுடோடுன் ரான்ஸம்- குட்டி என்ற பேரை உச்சரிக்க கடினமாக இருக்கும் என்பதற்காகவே வரலாறு அவரை ஃபெலா குட்டி என்றழைத்தது.ஃபெலா குட்டிக்கென்று உள்ள மாபெரிய வரலாறு அது.ஃபெலாவின் அன்னை மோன் என்ற சிறப்புப் பெயரிலான ஃபன்மிலாயோ ரான்ஸம் குட்டி ஒரு அரசியல் தலைவி.  காலனி ஆதிக்கத்துக்குட்படுவதற்கு முந்தைய ராஜவம்சத்துத் தொடரி.பின் நாட்களில் நைஜீரிய ஆப்ரிக்க துணைக்கண்டத்தின் மிக முக்கியமான பெண்ணிய செயற்பாட்டாளர் அரசியல் வாதி தன் மக்களில் இருவரை மருத்துவர்களாக்கிப் பார்த்தவர்.அவர்களில் ஒருவர் நைஜீரிய மருத்துவத் துறை அமைச்சராக இருந்த ஒலிக்கோயே ரான்சம் குட்டி. அவரது மூன்றாவது மகன் தான் ஃபெலா குட்டி. பிற சகோதரர்களைப் போலவே லண்டனுக்கு மருத்துவம் படிப்பதற்காக அனுப்பப் பட்ட ஃபெலாவின் மனதின் இசையூடான விழிகள் திறந்துகொண்டன.ட்ரினிடி காலேஜ் ஆஃப் ம்யூசிக் லண்டனில் அவர் சேர்ந்தார்.தேர்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் மாபெரும் செல்வாக்கான இசைஞர்களின் பட்டியலில் ஃபெலா குட்டியின் பெயர் பொன்வைர எழுத்துகளால் பொறிக்கப் பட்டு ரசிக மனங்களால் உயிர்நீர் வார்க்கப்பட்டு வருகிறது.

 ஃபெலா குட்டியின் மகன்கள் ஃபெமி குட்டியும் ஷான் குட்டியும் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.வெள்ளை ஆதிக்கத்தை எதிர்ப்பதென்பது காலங்காலமாக இருந்து வருகிற பெரு நெருப்பு.அதன் சரிதத்தில் முக்கியமான பங்களிப்பாளர்களில் ஒருவர் ஃபெலாகுட்டி.அவரது பாடல்கள் காகிதத்தில் ஒளிந்திருக்கும் நெருப்புச் சொற்கள்.ஃபெலாகுட்டிக்கும் நைஜீரிய போலீசுக்குமான மோதல் பிரசித்தமானது.ஏற்படுத்தப்பட்ட சாட்டு காரணமாக அவர் 1970களில் கைது செய்யப்பட்டார்.அதன் பிற்பாடு அவர் உருவாக்கிய விலை உயர்ந்த நரகல் "the Expensive shit".  அதனுள் ஒரு பாடல் Water No Get Enemy  நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதற்கு அருகாமையிலான முக்கியத்துவச் சொல்லாடலாக இதனைக் கொள்ள முடிகிறது. மனங்களில் விதைத்த நெருப்பாக மாறியது.எல்லோராலும் கொண்டாடப் பட்டு இன்றளவும் நேசிக்கப்படுகிற பாடகர் ஃபெலாகுட்டி.ஆஃப்ரோபீட் இசைவகைமையின் கடவுளாகவே அவரைப் போற்றுகிறது ஆப்ரிக்க நிலம்.ஏன் உலகமும் தான்.

நிலத்தின் கலையை அறிவதன் மூலமாக கலையின் அரசியலை உணரக் கூடும்.கலையின் அரசியலின் ஊடாக நிலத்தின் அரசியல் அறியவரும்.அரசியலின் கலையை மேம்படுத்துவதன் மூலமாக நிலத்தின் அரசியலை மேம்படுத்த முடியும்.
 

இந்தப் பாடலின் தொடக்கம் கிட்டத் தட்ட 5 நிமிடங்கள் வரைக்கும் இசையினூடாகவே நகர்ந்து செல்லும்.பாடல் தொடங்குவது அதன் பிற்பாடு தான்.வலியை வேதனையை அதன் கடுமை குன்றி விடாமல் முறையிடுவதற்கான குரலுடன் இயைந்து பயணிக்கிற வரைபட நகர்தலைப் போலவே தன் பாடலை உருவாக்கி இருப்பார் ஃபெலா. அவருடைய  AKO 

மற்றும் ஒரு ஒப்பந்தமுமில்லை
NO AGREEMENT ஆகியன அவரது முக்கிய இசைக்கோர்வைகளில் சில.கொண்டாடப் பட வேண்டிய கலைமேதை ஃபெலா குட்டி.அவரது இசைக்குறிப்புகள் எப்போதுமே ஆக்ரோசத்தின் கூட்டொலிகள் பல்முனை மீவுருவாக்கம் செய்யப்படுகிற உச்சாடனங்கள் ஆன்மாவிலிருந்து உடலினூடாகப் பிறந்து வரக் கூடிய சன்னவொலிகள் ஆகியவற்றின் கலவையாகவே நிகழ்ந்தன.தொன்மங்களின் கலைதலைத் தன் பாடல்களில் ஆங்காங்கே முயற்சித்தார் ஃபெலா.இவரது ஸோம்பி
 மறக்க முடியாத பாடலனுபவம்.


2 என்ரிகோ மேசியஸ்
யூதர்களில் ஒருவர்

காஸ்டன் க்ரானேஷியா என்ற இயற்பெயரிலான என்ரிகோ மேசியஸ் எனும் கொண்டாட்டப் புனைப் பெயருக்குரிய இவர் எண்பது வயதைக் கடந்து வாழ்ந்து வரக் கூடிய அல்ஜீரிய யூதப் பின்புலத்தைச் சார்ந்தவராக அறியப்படுகிற ஃப்ரெஞ்சு இசை மேதை.இவர் எழுதி இசையமைத்துப் பாடிய  பாடல்கள் நேரடியாக மனங்களுக்குள் விதைத்துத் தரப்படுகிற ஆனந்தக் கரைதலின் அத்யந்தக் கொண்டாட்டங்கள்.பரவசத்தைக் குரலால் பெருக்கி இசையால் வகுத்துத் தர விழையும் கணிக்கவியலா கணிதசூத்திரங்கள். இந்தப் பாடலின் இங்கிலீஷாக்கத்தை கீழே தந்திருக்கிறேன்.மூலமொழியின் உணர்வுகளுக்கு அருகாமையில் நம்மை நிற்கச் செய்ய இவ்வரிகள் கூடுதலாய் உதவும் அல்லவா..? ஏதோ என்னாலானது.

1 https://www.youtube.com/watch?v=AWcx4b0qkHU
 
Love is For Nothing
 
Like a salamander, love is wonderful
And is reborn from its ashes like the bird of fire.
No one can be compelled
To give it life.
And nothing otherwise can quench
The water of oblivion.
 
Love is for nothing.
You cannot sell it.
Love is for nothing.
You cannot buy it.
 
When your body awakens
You begin to tremble.
But when your heart awakens,
You begin to dream.
You dream of an exchange with another confession,
Because these strange chills
Only come in twos.1
 
Love is for nothing.
You cannot sell it.
Love is for nothing.
You cannot buy it.
 
Love is hope
Without reason and
Without law.
Love is like luck.
You don’t have to earn it.
 
There has to be a land
That loves you like crazy,
And without even recognizing you,
Is ready to give its life.
 
Love is for nothing.
You cannot take it.
Love is for nothing.
But you can give it.
Love is for nothing.
Love is for nothing.

மேற்காணும் பாடலின் ஆங்கிலார்த்தம்.குரங்கு கையோடு எடுத்துச் சென்றுவிட்ட பிரசாதக் கனி போலாக்கி விடுகிறார் மனசை.
கீழே இருக்கும் இந்த இரண்டு பாடல்களையும் கேட்டு கரைந்து விடுங்கள், எதற்கும்.

ஒன்று

இரண்டு


இசையுடனான என்ரிகோவின் கொடுக்கல் வாங்கல்கள் தனித்தவை.அவரது பாடல்கள் தொனித்தலுக்கும் கரைந்தழிகிற உச்ச நிரடலை நோக்கிய அலைதலுக்கும் பிரார்த்தித்தலுக்கு ஒப்பான ,முறையிடலுக்கும் கைவிடுதலை அறிந்த கணத்திலான இயலாமையற்ற வெறுமையின் அலட்சியத்துக்கும் விட்டு விட்டுத் தூறுகிற போதாமை மழையின் வருகைகள் குறித்த மித எதிர்ப்பு மனோநிலை மற்றும் பெயரற்ற நோய்மை ஆகியவற்றை எல்லாம் இசைவழி மொழிவழி உயிர்வழி சாட்சியம் செய்து பார்க்க முனைகிற விழைதல்கள்.


காதல் என்ற உணர்வின் ஆகப் பிரம்மாண்டமான கரைதல்களாக மேசியஸின் பாடல்களைச் சொல்ல விரும்புகிறேன்.இந்திய துணைக்கண்டத்தின் பாடல்களுக்கு நேரெதிர் மென்மை மற்றும் பயணித்தலைக் கோருகிற மேற்கத்திய பாடலின் அமைப்பு ஒரு பக்கம் இருக்கையில் நூற்றாண்டுகள் முந்தைய காப்பிய இசைக்கொத்துக்கள் மறுபக்கம் இவற்றிக்கிடையே பேராற்றின் மீது பாலத்தில் பிரயாணிக்கிற ஈரப்பனி ரயிலொன்றின் பயணகாலங்களாய்ப் பெருக்கெடுக்கின்றன இப்பாடல்கள்.காதலும் பாடலும் பிடிக்கும் என்று ஆரம்பிக்கிற யாரையும் வசீகரித்து விடுகிற பாடல்களின் தந்தை என்ரிகோ.தன்னை அறிந்து கொள்கிற யாரையும் வசீகரித்துத் தன் பிடிமானத்துக்குள் கொண்டுவருகிற வசியக்காரர்.

3 ரிதா ஹேவொர்த்
  காதலின் கடவுள்

 அமெரிக்கத் திரைவானின் அழகி என்ற பேருக்கு எப்போதும் பொருத்தமான ரிதா ஹேவொர்த் காதலின் கடவுள் எனக் கொண்டாடப் பட்டவர்.1940களில் பலரது தூக்கத்தைக் கெடுத்த புண்ணியவதி.இவருக்கான பாடலைப் பாடியவர்  ரோஸ்மேரி க்ளூனி எனும் பாடகி. அவருடைய குரலும் இவருடைய உடலும் முகமும் சேர்ந்து செய்த மாயத்தை தரிசித்து விட்டு வாருங்கள்.மறக்காமல் கன்னத்தில் போட்டுக் கொள்ளவும்.


When marimba rhythms start to play
Dance with me, make me sway
Like a lazy ocean hugs the shore
Hold me close, sway me more
Like a flower bending in the breeze
Bend with me, sway with ease
When we dance you have a way with me
Stay with me, sway with me
Other dancers may be on the floor
Dear, but my eyes will see only you
Only you have that magic technique
When we sway I go weak
I can hear the sounds of violins
Long before it begins
Make me thrill as only you know how
Sway me smooth, sway me now

  என்னை அயர்த்தியது எதுவென்றால் சென்ற நூற்றாண்டின் முதற்பாதியில் உருவான  (BLOOD AND SAND 1941) படமொன்றின் பாடல்.இன்றைக்குக் கேட்கும்போது இன்றைய தினத்தின் பாடலாகவே எனக்குள் ஒலிக்கிறது. அதற்கான முழு முக்கியக் காரணம் பாடிய க்ளூனியும் ஆடிய ரித்தாவும் சேர்ந்த ஒரு பெண்ணற்ற பெண் தான் இரண்டும் வேறு என்ற நிசத்தைப் பொய்ப்பித்து இந்தக் குரல் அந்த உடல்முகம் ஆகியவை இணைகையில் ஏற்பட்டுவிட்ட திட்டமற்ற ரசவாதம் இந்தப் பாடலின் ஜீவனாக மாறுகிறது.இன்னும் காலங்கள் கடந்து நீடிக்கும் என்பது என் நம்பகம் மாத்திரமல்ல. நிசம்.
 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...