???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதுச்சேரி 3 எம்எல்ஏ-க்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   06 , 2018  21:23:41 IST

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜக நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் குடியரசுத் தலைவர் நியமித்தார்.
 
எனினும், இதனை ஏற்காத புதுச்சேரி அரசு அவர்கள் மூவரை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கவில்லை. நியமனத்துக்கு எதிராக மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 3 பேர் நியமனம் செல்லும் என்று கூறியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மேல்முறையீடு செய்தார்.
 
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவைக்குள் மூவரையும் அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மூன்று பேர் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...