???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு!

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  22:14:55 IST

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஓர் இந்து அடிப்படைவாதி என்ற தலைப்பில் விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதியளிக்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் பரப்புரையின்போது காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி என பேசியதற்கு மதவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோட்சே யார் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

காந்தி உயிரோடிருந்தால் பாகிஸ்தான் பிரச்னைக்கு தீர்வு கண்டிருப்பார் என்றும், கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளும் போரிட்டு வருவாயை வீணடிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். கோட்சேவை தேச பக்தர் எனக் கூறி அடிப்படைவாத அமைப்புகள், கோவில் கட்ட முயற்சிப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோட்சே பற்றிய உண்மைகளை மக்களுக்கு சொல்லும் வகையில் மயிலை மாங்கொல்லையில் மே 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 14-ம் தேதி விண்ணப்பித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விடுமுறை கால அமர்வில் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...