![]() |
மராட்டியத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை!Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 23 , 2021 10:39:11 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அபாயம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 6, 971 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 35 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது.
இன்னும் 8 நாட்களுக்கு பிறகே மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்கள், சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.
|
|