???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  23:01:42 IST

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமாணி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமாணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது.

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமாணி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும், அவரது ராஜினாமா முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனக்கோரிக்கை விடுத்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...