அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  08:08:37 IST

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சென்னை சென்ட்ரலை ஒட்டிய வடசென்னைப் பகுதியில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையைக் கதைக் களமாக கொண்டு அந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டது. அதில், எம்.ஜி.ஆர், கருணாநிதி குறித்த காட்சியமைப்புகள் இடம்பெற்றிருந்தன.
 
இந்தநிலையில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
 
அதில், சமீபத்தில் வெளியான “சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து தவறாக விமர்ச்சிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான விமர்சனம் “எம்.ஜி.ஆர்" ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
“எம்.ஜி.ஆர்" அவர்களை பற்றி தவறான விமர்சனத்தை “சார்பட்டா” படத்தில் புகுத்தியுள்ள “சார்பட்டா" பட இயக்குனர் ரஞ்சித்தை கண்டித்து அவருடைய இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டம், நடத்த உள்ளேன். இதற்கு அனுமதி கேட்டு உள்ளேன்" என்று மனுவில் கூறியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...