???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி 0 ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு 0 சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் 0 கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்! 0 பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு 0 தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை 0 நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு 0 அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி 0 சென்னை காவல் ஆணையர் மாற்றம்! 0 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   09 , 2019  06:18:08 IST


Andhimazhai Image

தமிழ் சினிமாவில் வணிகம் பற்றி முழுமையாகத் தெரியாமையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர்.

 

இன்று மொபைல் வந்தபிறகு பள்ளி மாணவர்கள் கூட குறும்படம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அப்படி ஆகிவிட்ட சினிமாவை எப்படி எல்லாம் பணமாக்க முடியும் என்ற அறிவு மிகவும் அவசியம்.

 

சினிமா என்றால் தியேட்டர் டிவியில் போட்டு பணம் பண்ணலாம். ஓவர்சீஸ் விற்றால் பணம் கிடைக்கும். டப்பிங், ரீமேக்கிலும் பணம் கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலும் நமக்குத் தெரிகின்றது. இந்த வணிகத்தை செய்து பார்த்த பின் படம் தயாரிக்க வரலாம் என முடிவெடுத்தேன்.

 

முதலில் படத்தை வாங்கி தியேட்டரில் வாடகைக்கு எடுத்துப் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும் எனக் கற்றுக் கொண்டேன். பின்னர் சின்னதாக ஒரு ஏரியாவை வாங்கி விநியோகம் பண்ணிப் பார்த்தேன். படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ்-ஐ வாங்கி வணிகம் செய்து பார்த்தேன். அதன் பின்னர்தான் சினிமா தயாரிப்பில் இறங்கினேன். நெகட்டிவ் ரைட்ஸில் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

 

ஆரோகணம் படத்தை 28 லட்சத்துக்கு வாங்கினேன். அதை ரிலீஸ் பண்ணும் முன்பே ஐம்பது லட்சம் லாபம் பார்த்து விட்டேன். திட்டமிட்ட பட்ஜெட்டும் திட்டமிட்ட நடைமுறையும் இவ்வளவு குறைவான செலவில் ரிச்சாக அந்தப் படத்தைக் காட்டியது.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தை எழுபது லட்சத்தில் எடுத்தோம். அது கொடுத்த லாபம் பத்து கோடி. இந்த லாபத்தை லோ பட்ஜெட் படத்தில்தான் ஈட்ட முடியும். ஒரு படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம் என்பதற்கு இந்தப் படம் சான்றாகும்.

 

இதுவரை  27  படங்கள் பண்ணி விட்டேன். கடவுளின் அருளால் இதுவரை 2 முறை குடியரசுத் தலைவர் விருதும் வாங்கி விட்டேன். அதிகபட்சம் இவ்வளவுதான் நமது பட்ஜெட். அதற்கு மேல் போக வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன்.

 

முதலில் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணியபோது அவருக்கு நான் தந்த சம்பளம் ஒரு லட்சம்தான். கடைசியாக அவருக்குத் தந்த சம்பளம் 25 லட்சம். இனி அவரை வைத்து பண்ண வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். ஏன் என்றால் என் பட்ஜெட் சிறியது.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் ரீமேக் உரிமை மட்டும்  3.5 கோடிக்கு விற்றது. இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ரீமேக் ஆகி உள்ளது. சீன மொழியில் அந்தப் படம் – அங்கே கிரிக்கெட்டுக்குப் பதில் அவர்களின் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு – ரீமேக் ஆகிக் கொண்டுள்ளது. நிறைய நாடுகளில் கதையே இல்லை. அவர்களுக்குக் கூட கதை தரும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். ரீமேக் ரைட்ஸில் இந்தளவுக்கு சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

 

ஒரு ஆடியோ கம்பெனி எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்பதை முதன்முதலாக ஆனந்தயாழை பாடல் கற்றுத்தந்தது. அந்தப் பாடலின் ஆடியோ ரைட்ஸ் என்னிடம் இல்லை. தங்கமீன்களை முதலில் கவுதம் மேனன் பாதி தயாரித்த பிறகுதான் நான் வாங்கி மீதியை முடித்தேன். அதற்கு முன்பே அதன் ஆடியோ ரைட்சை  விற்றுவிட்டனர். அந்தப் பாட்டின் மூலம் அக்கம்பெனி சம்பாதித்த பணம் 1.1 கோடி ரூபாய்.

 

முன்பெல்லாம் ஒரு படம் போட்டால் அதன் சிடியை தனியாக போட்டு ஒவ்வொரு கடையாக விற்க வேண்டும். இன்று எல்லாமே டிஜிட்டலாகி விட்டது. மொபைலில் டவுன்லோடு, ரிங்க்டோன், யூ டியூப் என அதன் எல்லை விரிவடைந்துள்ளது. எல்லாப் பாடல்களும் ஆனந்தயாழை மாதிரி போகாது என்றாலும் ஆடியோ ரைட்ஸ் என்பது நிரந்தர சொத்து என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன். தொழில் நுட்பம் வளர வளர, புதிது புதிதாக வருவாய் வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

 

அண்மையில் இந்திய அரசு ரயில்களில் படம் திரையிட வாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது. இதன் மூலம் காப்புரிமைத்தொகை இன்னும் கூடுதலாக நெகட்டிவ் ரைட்ஸ் வைத்திருப்பவருக்கு வரவுள்ளது. அதே போல் பயணிகள் கப்பல், விமானங்களில் உங்கள் படங்களைக் காட்டுவதற்கும் தனியாக வருவாய் வரவுள்ளது. இதனால் தற்போது ஆடியோ மட்டுமல்ல, பல வகைகளில் வருவாய் வாய்ப்பு இருப்பதால் ரைட்ஸ் பற்றி அதிக கவனம் கொடுக்கிறேன். மும்பையில் அரசு நிறுவனமான IPRS இல் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்கள் படத்தின் பாடல்கள் / காட்சிகள் / காமெடி சீன் என அவற்றை யூடியூப், இன்டர்நெட், டிவி ஒளிபரப்பினால் அவற்றைக் கண்காணித்து உரிய காப்புரிமைத் தொகையை ஒரு குறிப்பிட்ட கமிசன் பிடித்துக் கொண்டு உங்களுக்கு மாதாமாதம் தந்துவிடுகிறது.

 

ஆடியோவில் மட்டும் இவ்வளவு வருவாய் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரம்மி படத்தில் வரும் கூடை மேல கூடை வச்சு பாடல் மலேசியாவில் மட்டும் 28 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. என்னுடைய தரமணி படத்தின் ஆடியோ பதினாறு லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது.

 

உங்கள் படத்தின் நெகட்டிவ் ரைட்சை அப்படியே விற்று விடாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத பல வருவாய்கள் காப்புரிமை வடிவில் அதில் ஒளிந்துள்ளன. இந்திப் பட உலகில் உள்ளவர்கள் இதில் விவரமாக உள்ளதால் சேட்டிலைட் உரிமையைக் கூட ஐந்து வருடத்துக்குதான் விற்கின்றனர். அதுவும் non exclusive ஆக விற்கின்றனர். ஒரே நேரத்தில் பல சேனல்களுக்கும் இவ்வாறு விற்றுவிட முடிகிறது. நாமோ சேட்டிலைட் உரிமையை 99 வருடங்களுக்கு தந்துவிடுகிறோம். இதை எல்லாம் நாம் உணர்ந்து நம் வருவாயை அதிகமாக்குவது எப்படி எனப் பார்க்க வேண்டும். நம் படத்தின் உரிமைகள் அனைத்துமே நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் பாரம்பரிய சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

அந்த வகையில் நான் சேட்டிலைட் உரிமையைத் தவிர டாட்டா ஸ்கை, ஏர்டெல் என டிடிஹெச்-க்கு தனியாக விற்று அதிலும் வருவாய் பார்க்கிறேன்.

 

இன்னும் பல வழிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு பெரும் கேபிள் நெட்வர்க் உள்ளது. அதில் ஒரு முறை உங்கள் படத்தை ஒரு முறை  ஒளிபரப்ப – அது ரொம்ப சின்ன பட்ஜெட் படமாக இருந்தால் கூட– குறைந்தபட்சம் சந்தாதாரர் ஒருவருக்கு மூன்று ரூ. வீதம் 39  லட்சம் ரூபாயைத் தருகின்றனர்.

 

நாம் போடும் ஒவ்வொரு ஒப்பந்தமும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நான் தயாரித்த படத்தில் இசையமைப்பாளருடன் போட்ட ஒப்பந்தத்தில் அதன் ஆடியோவில் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லாதவகையில் கவனமாக ஒப்பந்தம் தயாரித்திருந்தேன். ஏனெனில் அவ்வாறு தனியாகக் குறிப்பிடாதபட்சத்தில் இசையமைப்பாளருக்கும் காப்பு உரிமைப் பங்கு உள்ளது. பல படங்களின் பாடல் உரிமை சோனி போன்ற கம்பெனி வசம் உள்ளது. அண்மையில் ரஹமான் கச்சேரி நடந்தபோது அங்கே பாடப்பட்ட 38 பாடல்களைப் பாட பாட்டு ஒன்றுக்கு மூன்று லட்சம் கேட்டது சோனி. பின்னர் பேரம் பேசி ஒவ்வொரு பாட்டுக்கும் ரூ. இரண்டு லட்சம் வாங்கியது அந்தக் கம்பெனி.

 

நமது படங்களை அமேசான் போன்றவை முதலில் தேடித் தேடி வாங்கினர். தற்போது revenue share மாடலுக்குப் போயுள்ளனர்.

 

இந்த வழிமுறைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு நம் வணிகத்தை நகர்த்தினால் நிச்சயம் தமிழ் சினிமா லாபமான விசயம்தான்.

 

 -கற்பகவிநாயகம்

 

(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் நிகழ்த்திய உரையிலிருந்து)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...