???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவு - கவிதையில் அஞ்சலி செலுத்திய சுப்பிரமணிய சிவா

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   01 , 2020  05:02:55 IST

'திருடா திருடி', 'மன்மதன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.

திருடா திருடி, மன்மதன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிங் போன்ற படங்களை தயாரித்த கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு சிம்பு, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகாந்தின் மறைவையொட்டி இயக்குநர் சுப்பிரமணிய சிவா உருக்கமாக கவிதை எழுதியுள்ளார்.

சுப்பிரமணிய சிவா எழுதிய அந்த கவிதை:

நான்,
வேர் இல்லாத மரம்
இறகு இல்லாத பறவை
துடுப்பு இல்லாத படகு
இறைவன் எனக்கு
வரம் தரவில்லை
கிருஷ்ணகாந்தாகவே வந்தார்
திருடா திருடி தந்தார்
நான் உண்ணும் உணவு
அவருடையது ..
எல்லோரும் நல்லாயிருக்கவே
எப்போதும் பேசுவார்
சினிமாவை நம்பியே
பொழுதெல்லாம் சுற்றுவார்
எதார்த்தமாக இருந்து
ஏமார்ந்த ஏணிகளில்
இவரும் ஒருவர் ..
காலனே, உன் ஊரில்
நல்லவர்கள் இல்லையா?
100 வரை எங்களுடன்
வாழ வேண்டியவரை
நேற்றுடன் உன்னுடன்
அழைத்து கொண்டாயே ..
தப்பு செய்துவிட்டதாக
பித்துபிடித்து அலைவாய் ஒருநாள்
அய்யோ..இனி
வாரம் 3 முறை
யார் என் உயர்வு நலம்
விசாரிப்பார் ..
அய்யோ..இனி
யாரிடம் நான்
ஆசி வாங்குவேன் ..
சார் ..சத்தியம்
கண்ணீரோடு சொல்கிறேன்
இருக்கும் வரை
உங்களை துதிப்பேன்
பிறகு ..
சொர்க்கம் வந்து
உங்களுடையே இருப்பேன்
கிருஷ்ணகாந்த் சார்
உங்கள் குடும்பத்தாருடன்
சேர்த்து என்னையும்
ஆசீர்வதியுங்கள்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...