???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உங்கள் முடிவு மீது மிகுந்த மரியாதை உள்ளது: ராகுல் ராஜினாமா குறித்து பிரியங்கா கருத்து

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   04 , 2019  22:51:13 IST

மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக தொடர்ந்து தெரிவித்த வந்த ராகுல் காந்தி, நேற்று அதனை உறுதி செய்தார். தான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலமையிடம் அளித்து விட்டதாகவும் நேற்று தெரிவித்த அவர், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அந்த நடைமுறையில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும்  அறிவித்தார்.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவிட்ட ராகுல் “இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்துடன் ஒன்றினைந்துள்ளனர். யாரும் அதிகாரத்தை தியாகம் செய்ய முன்வருவதில்லை. ஆனால் நம் பதவிக்கான விருப்பத்தை நாம் விட்டுத்தராவிட்டால், நம்மால் எதிரிகளை தோற்கடிக்க முடியாது. அப்போது தான் ஆழ்ந்த கருத்தியல் ரீதியான யுத்தத்தில் போராட முடியும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுலின் டிவீட்டிற்கு பதில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நீங்கள் (ராகுல்காந்தி) செய்ததை செய்வதற்கு வெகு சிலரிடம் மட்டும் தைரியம் இருக்கும். உங்கள் முடிவு மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...