அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மீண்டும் லக்கிம்பூர் செல்லும் பிரியங்கா காந்தி!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  09:45:06 IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி  கடந்த அக்டோபர் 4ம் தேதி சென்றபோது அவரை போலீசார் தடுத்து காவலில் வைத்தனர்.  இதேபோல், ராகுல் காந்தியையும் அப்பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
 
இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட  5 பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 6ம் தேதி இரவு 10 மணியளவில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி பிரார்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்து லக்கிம்பூர் புறப்பட்டு சென்றார். பிரியங்காவின் வருகையையொட்டி அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
லக்னோ-சீதாபூர்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் பலத்த தடுப்பு மற்றும் போலீஸ் சோதனைகள் காணப்படுகின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...