???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியாஆனந்த் சம்பளத்தை உயர்த்திய இயக்குநர்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   07 , 2014  04:39:10 IST

 
பிரியாஆனந்த் நிறையப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சம்பளம் என்பது பத்து முதல் பதினைந்துலட்சம் வரைதான் இருந்தது. அவர் நடித்த எதிர்நீச்சல் போன்று ஒருசில படங்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு எந்தவகையிலும் அவர் காரணமில்லை என்பதுதான். இந்தநிலையில் இப்போது ஒரு படத்தில் நடிக்க அவரை அணுகியபோது என் சம்பளம் ஐம்பதுஇலட்சம் என்று சொன்னாராம். அணுகியவர் அதிர்ந்துபோய் உங்கள் சம்பளம் பதினைந்துதானே என்று கேட்டிருக்கிறார். அதற்கு என் சம்பளம் எவ்வளவு என்று இப்போது வெளியாகியிருக்கும் ஒருஊர்லரெண்டுராஜா படக்குழுவினரைக் கேட்டுப்பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இந்தப்படத்துக்காக அவருக்கு நாற்பத்தைந்து இலட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இது எப்படி? இந்தப்படத்தின் முதுகெலும்பே அவர்தான் எனவே அவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கவேண்டும் என்று தாயரிப்பாளரிடம் போராடி இவ்வளவு தொகைக்குச் சம்மதம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் நாறப்த்தைந்து வாங்கிவிட்டு அடுத்தபடத்துக்குக் குறைக்கமுடியாதே என்பது பிரியாஆனந்தின் எண்ணம். அதேசமயம் இந்தப்படம் தயாரானதும் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு கடுமையான அர்ச்சனைகள் செய்தார் என்றும் அதற்கு முக்கியக்காரணமே பிரியாஆனந்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்ததுதான் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ ஒரு ஊர்ல ரெண்டுராஜா படத்தின் மூலம் பிரியா ஆனந்தின் சம்பளம் உயர்ந்துவிட்டது மட்டும் உண்மை என்று சொல்கிறார்கள். இது நீடிக்குமா என்று கேட்டால் அதற்குச் சரியான பதில் எவரிடமும் இல்லை என்பதும் உண்மை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...