???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்கா காந்தியும் உளவு பார்க்கப்பட்டுள்ளார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  22:05:13 IST

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இணைய உளவு நிறுவனமான பேகாஸஸ் என்ற வைரஸின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 1,400 பேரின் வாட்ஸ்அப் மூலம் மொபைல் போன்களை ஹேக் செய்துள்ளது என்று வியாழக் கிழமை செய்திகள் வெளியானது. அதில், இந்தியாவிலும் செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 17 பேரின் மொபைல் போன்கள் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, ‘தன்னுடைய மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நிறுவனத்தைப் பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் போன்களை மத்திய அரசு உளவு பார்க்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘பிரியங்கா காந்திக்கும் உங்கள் மொபைல்போன் உளவுபார்க்கப்படும் வைரஸ் உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்திவந்துள்ளது. இந்தியாவில் மற்றவர்களுக்கு அந்த குறுஞ்செய்தி வந்த அதேநேரத்தில்தான் பிரியங்கா காந்திக்கு அந்தச் செய்தி வந்துள்ளது. அந்தநேரத்தில் வெளிநாட்டு எண்ணிலிருந்து போன்கால் வந்துள்ளது.

ஆனால், அதனை அவர் எடுக்கவில்லை. ஆளும் பா.ஜ.க அரசு எதிர்கட்சித் தலைவர்களை வைரஸ்களைப் பயன்படுத்தி உளவுபார்க்கிறது. பல மூத்த அரசியல்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உளவுபார்க்கப்படலாம்’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...