அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மதபோதகர் கொலை: கஞ்சா இளைஞர் கைது

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:19:53 IST

திருவள்ளூரில் பிரார்த்தனைக் கூடத்திற்குள் மதபோதகரை கொலை செய்த இளைஞரை அரை மணி நேரத்திற்குள் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர்.

பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தில் 62 வயதான ஈனோஷ் கடந்த சில ஆண்டுகளாக ஊழியம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தாம்பரம் அடுத்த இரும்புலியூர் நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். அப்போது, 20 வயதான மோசஸ், கஞ்சா போதையில் அங்கு வந்துள்ளார். இதைக் கண்ட ஈனோஷ் அவரை கண்டித்துள்ளார்.

பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் மோசஸ் அங்குள்ள சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஈனோஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோசஸ் கொலை செய்தது தெரியவந்தது. அத்துடன், எதுவும் நடக்காதது போல், தாம்பரத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...