???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொன்பரப்பியில் செய்தியாளர் மீது தாக்குதல் - பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   19 , 2019  03:55:55 IST

பொன்பரப்பியில் நேற்று நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து செய்தி சேகரித்த நீயூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"நேற்று (18-04-2019) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நீயூஸ் 18 தொலைக்காட்சி  செய்தியாளர் கலைவாணன்  மீது சமுக  விரோத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும்  அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த மற்ற செய்தியாளர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

சமுக விரோத கும்பலால் தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் கலைவாணன் அரியலூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபகாலமாக செய்தியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களில் விருதுநகரில் , மதுரையில் என பல பகுதிகளில்  அரசியல் கட்சியினர், காவல்துறையினர் என பலதரப்பினரும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்களை  நடத்தி வருகின்றனர். இத்தகைய போக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழக அரசு உரிய காலத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்காததே இதற்கான காரணம் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக வேண்டிய கட்டாயத்தை இந்த சம்பவங்கள் உறுதி செய்கிறது.

பத்திரிகையாளர் கலைவாணனை தாக்கிய சமுக விரோத கும்பலை கைது செய்ய தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


English Summary
Press club Condemned for reporter beaten

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...