???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி !

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  07:28:14 IST

ஆளுநர் பரிந்துரை செய்ததை அடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர்  ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
 
 
மகராஷ்டிராவில் சட்டசபை  தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும் அங்கே யார் ஆட்சி அமைப்பார் என்ற குழப்பம் நீடித்துவருகிறது.
 
 
105  இடங்களைப் பெற்ற பாஜகவிடம் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கேட்டபோது, பாஜக விருப்பம் இல்லை என்று கூறியதால் சிவசேனாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆட்சியமைக்க சிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டதால், அக்கட்சியின் கோரிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை.
 
 
இதனால் தேசியவாத காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியுமா என்று இன்று இரவு 8.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் அக்கட்சியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால்  இன்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
 
 இதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது.
 
 
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவரின் ஆட்சியை அமல்படுத்த  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுஒருபுறம் இருக்க மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநர் தங்களுக்கு கால அவகாசம் தரவில்லை என்று சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...