???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  23:06:39 IST

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசினார். அப்போது பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை எனத் தெரிவித்தார். நமது மகள்கள் மீதான வன்முறை நிகழ்வுகள், நாட்டின் மனசாட்சியை உலுக்குவதாக வேதனை தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் கருணை மனு அளிக்க உரிமை இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். மேலும் கருணை மனுக்கள் தொடர்பாக நாடாளுமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்களுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். நிர்பயா வழக்கில் மரண தண்டனை குற்றவாளி அளித்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த நிலையில், கருணை மனுக்களை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...