???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனாதிபதி தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  01:34:38 IST

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.

 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் பாராளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது.

 

எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டுகள் பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். வாக்குச்சாவடியில் வாக்காளர்களான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது ( Do's & Dont's) என கூறுகிற குறிப்புகளைக் கொண்ட சிறப்பு ‘போஸ்டர்’ களையும் தேர்தல் கமிஷன் இந்தத் தேர்தலில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25-ஆம் தேதி பதவி ஏற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...