???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபஞ்சனின் சந்தியா சிறுகதை: தமயந்தி கட்டுரை

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   22 , 2018  00:55:49 IST


Andhimazhai Image
பிரபஞ்சனின் சந்தியா, நான் கல்லூரி காலங்களில் மிகவும் ரசித்த சிறுகதை. அந்நாள் ‘தாய்’ இதழில் வார வாரம் வெளியான அச்சிறுகதை கோற்கப்படும் போது ஏற்படும் தொடர்கதைத் தோற்றமே ‘சந்தியா’ வின் அழகு. என் பதின்ம பருவத்தில் ‘சந்தியா’ என்னுள் ஊட்டிய மாற்றங்களை எளிதில் விவரிக்க இயலாது. 
 
 
இன்று நான் எங்கும் அணிந்து செல்லும் முகம் உருவானதில் பரும் பங்கு ‘சந்தியா’ உடையதென்றால் மிகையாகாது. சந்தியாவாக வாழ நினைத்து என் வாழ்க்கையை நான் உருவாக்கிக் கொண்டதின் பின்னனியில் சில காரணங்களுண்டு. பிரதானமாக கூற வேண்டுமானால் சந்தியா மனதில் தோன்றிய கருத்துகளை மட்டுமே பேசுபவள், பொய் கூற விரும்பாதவள். தவறான மனிதர்களை தன்னோடு சேர்த்துக்கொல்லாதவள். இது சரி அது தவறு என்ற கருத்தியல் கொள்கையிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. கோட்பாடு வேற்றுமைகள் கொண்டவர்களோடு என்னால் நெருங்கிய நட்பு வளர்க்கவோ உறவு கொண்டாடவோ முடிந்ததே இல்லை. இவையாவும் உரையாடல்களால் சமன் செய்துவிட முடியும் என்று நம்புபவள் நான். ஆனால் ஒரு போதும் வன்முறையை தூண்டக்கூடிய, மனித உயிரை வற்க ரீதியாய் சாதி ரீதியாய் பேதங்களுக்கு ஆட்படுத்தி பார்க்கக் கூடய பார்வையை நான் ஒரு போதும் எற்றுக்கொள்ள மடிந்ததில்லை. 
 
 
நான் விரும்பும் வாழ்க்கையை ஒரு எழுத்தாளராக தான் வாழ வேண்டும் என்பதை சந்தியாவை பார்த்து தான் முன்னெடுத்துக் கொண்டேன். பாலின பிரச்சனைகளை கையால்வதாய் இருக்கட்டும், ஆண்களோடு நட்பு கொள்ளும் போது தன் உடலை ஒரு பொருட்டாக கருதாமல் இருப்பதும் அவள் பாலின பேதமற்ற உலகை முன்எடுத்து செல்வதைக் காட்டுகிறது.ஆண் பெண் உறவுநிலை வெற்றிக்கு இதுவே முக்கியான காரணம் என்று நான் சொல்வேன். ஆண்கள் நிறைந்த உலகில் இத்தனை தூரம் போராடி என் முகத்தையும் என் பெயரையும் பல கயமைகளையும்  கடந்து காட்ட முடிகிறதென்றால் நேர்மை ஒன்றை மட்டும் துணையாய் கொண்டு அத்தனை பிரச்சனைகளையும் கடந்து செல்ல முடிகிறதென்றால் அதன் காரணம் பிரபஞ்சனின் சந்தியா மட்டுமே. 
 
 
வாழ்வில் இழப்புகளும் பிரிவுகளும் பல கண்டுவிட்டேன். வாழ்க்கை பற்றின என் கனவுகள் தவுடுபொடியாகி வாழ்க்கை வேறு ஒரு வாழ்வை என் மீது சுமத்தும் பொழுது அதை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு கிடைத்தது பிரபஞ்சனின் சந்தியா விடம் இருந்து தானென்று உரக்க சொல்வேன். இத்தனை நிறைவான ஒரு பாத்திரம் பெண்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. 
 
 
ஆண்கள் தங்கள் உடல்,  காதல், காமம் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகள் யாவற்றையும் வெளிப்படுத்த சூழல் இங்கே உண்டு. ஆனால் பெண்களுக்கு அந்த சூழல் என்றும் அமைந்தே இல்லை. ஒரு பெண்ணாக நான் இவ்வாறான சவால்களை சந்திக்கும் வலிமையை தரக் கூடிய இலக்கியங்களில் பிரபஞ்சனின் சந்தியா போன்று என் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்கியது வேறேதுமில்லை.
 
 
-தமயந்தி   படம்: புதுவை இளவேனில்
 
 
(அந்திமழை  ஜூலை 2018 இதழில் வெளியான கட்டுரை)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...